ANDHRA PRADESH: பெண் காவலர்களின் சீருடைக்கு அளவெடுத்த ஆண் ஊழியர்கள்.. பரபரப்பு வீடியோவால் பாய்ந்த நடவடிக்கை?
முகப்பு > செய்திகள் > இந்தியாAndhra Pradesh, திருப்பதி, 08, பிப்ரவரி, 2022:- பெண் போலீசாருக்கு சீருடை தைக்க, ஆண் காவலர்கள் அளவு எடுத்ததாக கூறப்படும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெகு வேகமாக பரவி வந்த விவகாரம் பரபரப்பை ஏறடுத்தியுள்ளது.
வைரல் வீடியோ
ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லுர் மாவட்டத்தில் பணிபுரியும் பெண் போலீசாருக்கு சீருடை தைப்பதற்காக, ஆண் தலைமை காவலர் அளவு எடுத்ததாக சொல்லப்பட்டு, அளவெடுக்கும் சமயத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட, அது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவியது.
Also Read: "மாட்டிக்கிட்டியே பங்கு".. பீஸ்ட் மோடு தான் அர்ச்சனாவுக்கு.. ராஜா ராணி 2-ல் தரமான சம்பவம்
பெண் போலீசார் அதிருப்தி
இதனால் சில பெண் போலீசார் வேதனை அடைந்ததாகவும், அத்துடன் அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் தங்கள் அதிருப்தியை தெரிவித்ததாகவும் கூறப்பட்டதை அடுத்து, விஷயம், நெல்லுார் மாவட்ட எஸ்.பி., விஜயா ராவின் கவனத்துக்கு வந்திருக்கிறது.
எஸ்.பி எடுத்த நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில், பெண் போலீஸாரின் சீருடைக்காக அளவு எடுத்தது யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதன் பிறகு அந்த பணியில் தலைமை காவலர் ஒருவர் ஈட்டுபட்டதாக தகவல் தெரிய வர, சம்மந்தப்பட்டவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு எஸ்.பி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீருடை அளவு எடுக்க பெண் 'டைலர்'
மேலும் சீருடை வழங்கப்பட வேண்டிய பெண் போலீசாருக்கு, ஒரு பெண் 'டைலரை' நியமித்து, அளவு எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அத்துடன், காவலர்கள் சம்மந்தப்பட்ட இந்த பணிகளின்போது, அனுமதி இல்லாத அவ்விடத்தில் அத்துமீறி, இப்படி வீடியோ எடுத்து, அதையும் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அந்த அடையாளம் தெரியாத நபர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க எஸ்.பி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.
Also Read: முகத்துக்கு நேரா முதல் Open நாமினேஷன்! அத்தனை பேரும் சொன்ன அந்த 2 பேர்!