ஜெயிலில் இருந்து கைதி தப்பித்துச் செல்லும் நிகழ்வைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம் அல்லது படித்திருப்போம். ஆனால் அவர்களையெல்லாம் மிஞ்சும் கில்லாடி கிங்க்சைஸ் ஒருவர் தான் இப்போது இணையத்தில் பிரபலம். பிரேசிலில் கடந்த டிசம்பர் 28, 2021 ஆம் தேதி, நபர் ஒருவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்து ஜீப்பில் அழைத்துச் சென்றிருக்கின்றனர். அப்போது, காவல்துறைக்கே தெரியாமல் ஜீப்பில் இருந்து கைவிலங்கோடு தப்பித்துச் சென்றிருக்கிறார் அந்த நபர்.

கம்பிநீட்டிய கைதி
தங்களுக்கு அந்த குற்றவாளி கம்பி நீட்டியது கூடத் தெரியாமல் கடமையே கண் எனக் காவல்நிலையத்திற்குச் சென்ற அதிகாரிகள் ஜீப்பின் பின்பக்கத் திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். உடனடியாக தேடுதல் வேட்டையை காவல்துறை அதிகாரிகள் துவங்கினாலும் ஜீப்பில் காவல்துறைக்கு டாட்டா காட்டிய நபரை இன்று வரை பிரேசில் காவல்துறையால் பிடிக்கமுடியவில்லை.
குற்றவாளி காவல்துறை வாகனத்திலிருந்து தப்பித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் யூடியூபில் வெளியானவுடன் பல்லாயிரம் பேர் இதனைப் பார்த்து வருகின்றனர். மேலும், அவரை உண்மையாவே கை விலங்கில் பூட்டினீர்களா? எனக் காவல்துறையை கமெண்டால் துளைத்துவருகின்றனர் மக்கள்.
விசாரணைக்குழு
அலகோவா பகுதியின் பரைபா-வில் நடந்த இந்த இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், குற்றவாளி எப்படி தப்பித்துச் சென்றார் என்பதைக் கண்டறிய தொழில்நுட்பக்குழு ஒன்றும் களத்தில் இறங்கியுள்ளதாம்.

மற்ற செய்திகள்
