Raja Rani 2: "மாட்டிக்கிட்டியே பங்கு".. பீஸ்ட் மோடு தான் அர்ச்சனாவுக்கு.. ராஜா ராணி 2-ல் தரமான சம்பவம்
முகப்பு > சினிமா செய்திகள்Raja Rani 2: விஜய் டிவி ராணி சீரியலில் கடந்த வாரங்களில் அர்ச்சனாவும் செந்திலும் பொய் சொல்லிவிட்டு குற்றாலம் லாட்ஜில் தங்கி, போலீஸாரின் சந்தேக கேஸில் மாட்டி சரவணனால் வெளியே எடுக்கப்பட்டனர்.

சந்தியாவின் சந்தேகம்..
ஆனால், அர்ச்சனா தன் அம்மா நெஞ்சுவலியால் ஹாஸ்பிடலில் இருப்பதாக சொல்லிவிட்டு தன் கணவர் செந்திலுடன் தென்காசியில் இருந்து குற்றாலத்துக்கு போன நேரம், இதில் சந்தேகப்பட்ட நாயகி சந்தியா, முன்பு தன் மாமியார் சிவகாமி கைதான நேரத்திலும் இதே ஹாஸ்பிடல் கதையை அர்ச்சனா சொன்னதையும் நினைவுபடுத்திக்கொண்டு அனைத்தையும் விசாரிக்க, சிவகாமி மீது புகார் கொடுத்ததே அர்ச்சனாவின் தங்கை ப்ரியா தான் என தெரியவந்தது.
விஷயம் அறிந்த சந்தியா, அர்ச்சனாவின் தங்கை ப்ரியாவை பிடித்து கேட்க அப்பெண் உண்மையை உளறியிருந்தார். அந்த புகாரை சந்தியா தான் கொடுத்தார் என சரவணனின் அம்மா நம்பிக் கொண்டிருப்பதுடன், போலீஸை கண்டாலே காண்டு ஆகிறார். எனவே இந்த விஷயத்தில் ஒரு முடிவை எட்ட வேண்டும் என சந்தியா, சரவணனுடன் டிஸ்கஸ் பண்ணுவதற்காக காத்திருந்தார்.
வீட்டுக்கு வந்த போலீஸ்..
ஆனால் அதற்குள் சரவணன், லாட்ஜ் கேஸில் சிக்கியிருந்த செந்திலையும் அர்ச்சனாவையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் மீட்டு வருவதில் பிஸியாகிவிட்டார். இந்நிலையில் தான் சரவணனின் வீட்டுக்கு போலீஸில் இருந்து வரும் ஒரு போலீஸ் பெண்மணி, சரவணனின் அம்மா சிவகாமி மீது குடும்ப வன்முறை புகார் கொடுத்தது யாரென்கிற உண்மையை போட்டு உடைக்கிறார். அதாவது ப்ரியா என்கிற பெண் தான் ஆன்லைன் மூலமாக புகார் கொடுத்ததாக சொல்லி, சொல்கிறார்.
உடைந்த உண்மை..
ப்ரியா என்பது அர்ச்சனாவின் தங்கையாச்சே? என அனைவரும் யோசிக்க, அர்ச்சனாவின் அம்மாவோ, சந்தியாவுக்கு எல்லா உண்மைகளும் தெரியும். அவள் இதுபற்றி ப்ரியாவிடம் விசாரிக்க ப்ரியா ஒப்புக்கொண்டுவிட்டாள் என சொல்கிறார். அதனை கேட்டு அனைவரும் ஷாக் ஆகிவிடுகின்றனர்.
அதாவது இந்த குடும்பத்தை கட்டிக்காத்து வரும் சிவகாமியின் மீதே குடும்ப வன்முறை புகார் கொடுத்தவர் அர்ச்சனா வீட்டில் தான் இருக்கிறார். அதுவும் அர்ச்சனாவின் தங்கை ப்ரியா, ஆனால் ஏன் அவள் அப்படி செய்ய வேண்டும்? சந்தியா எதற்காக இதை விசாரித்தாள், சந்தியாவுக்கு இந்த விஷயம் தெரிந்திருக்கிறது என்றால் ஏன் உடனே வந்து யாரிடமும் சொல்லவில்லை என பலரும் நாயகி சந்தியாவை பார்க்கின்றனர்.
அர்ச்சனாவுக்கு அர்ச்சனை..
எனினும் அர்ச்சனாவுக்கு அர்ச்சனை இருக்கு என்பது மட்டும் இந்த ப்ரோமோவில் இருந்து தெரியவருகிறது. இந்த ப்ரோமோக்களை பார்த்துவிட்டு ரசிகர்கள், ராஜா ராணி சீரியலில் விறுவிப்பான கட்டம் வந்துவிட்டதாக கூறி கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். காரணம் இத்தனை நாள், ராஜா ராணி சிரியலில் அர்ச்சனா மற்றும் செந்தில் சேர்ந்து செய்த தகிடு தத்தங்களை சரவணனும் சந்தியாவும் பொறுத்துக் கொண்டனர்.
சரவணன் - சந்தியா பொறுமை ..
பிறகு இருவரையும் அழைத்து பக்குவமாக எடுத்துரைத்து திருத்த முயற்சித்தனர். அதன் பிறகும் அவர்கள் செய்யும் தவறுகளை பொறுக்க முடியாமல் தனிப்பட்ட முறையில் அழைத்து கண்டித்தனர். அதிலும் கட்டக் கடைசியில் சரவணன் தனியாகவும், சந்தியா தனியாகவும் இவர்களை டீல் செய்தனர். சரவணன் - சந்தியா இருவரும் அவர்களுக்குள் தனிமையில் இருந்தபோதும் கூட இவர்கள் செய்யும் தவறுகள் பற்றி பேசிக் கொள்ளவில்லை. காட்டிக்கொள்ளவில்லை. இதனிடையே செந்தில் கொஞ்சம் திருந்தியிருந்தாலும் வேறு வழியின்றி அர்ச்சனா சொல்படி நடந்துகொண்டிருந்தார்.
இந்த முறை வாய்ப்பில்லை?
ஆனால் இந்த முறை தானாகவே வந்த பெண் போலீஸார் சந்தியாவின் வீட்டுக்கு வந்து சொன்ன உண்மையால் குடும்பத்தில் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கிறது. இதனால் அடுத்தடுத்த சண்டைகள் நடந்து அர்ச்சனா மற்றும் செந்தில் கண்டிப்புடன் பெரிய அளவில் திட்டு வாங்கலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர். எனினும் சில ரசிகர்கள், இது கனவுன்னு ஒரே போடாய் போட்டாலு போடுவார்கள், வீணாய் அர்ச்சனா தண்டிக்கப்படுவார் என மனப்பால் குடிக்க வேண்டா என்றும் கூறி வருகின்றனர்.
Also Read: முகத்துக்கு நேரா முதல் Open நாமினேஷன்! அத்தனை பேரும் சொன்ன அந்த 2 பேர்!