IPHONEஐ திருடியதாக கூறி... வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்!.. சினிமா தயாரிப்பாளர் வீட்டில் அரங்கேறிய மிருகச்செயல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாசினிமா தயாரிப்பாளர் வீட்டில் திருடியதாக கூறி வாலிபர் ஒருவரை அடித்து உதைத்து தலையை மொட்டையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், சினிமா தயாரிப்பாளர் நூதன் நாயுடு வசித்து வருகிறார். இவரது மனைவி பிரியா மாதுரியின் ஐபோனை வீட்டில் வேலை செய்த 20 வயது வாலிபர் திருடிவிட்டதாக குற்றம்சாட்டி உள்ளனர். இது தொடர்பாக, அவரை வரவழைத்து விசாரித்தபோது கடுமையாக தாக்கி உள்ளனர்.
பின்னர், வலுக்கட்டாயமாக அவரது தலையை மொட்டை அடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட வாலிபர் அளித்த புகாரின் அடிப்படையில், பிரியா மாதுரி உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அந்த வாலிபர், தயாரிப்பாளரின் வீட்டில் பிப்ரவரி மாதம் முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை வேலை செய்துள்ளார். பின்னர் ஆகஸ்ட் 27ம் தேதி அவரை வீட்டுக்கு வரவழைத்து, ஐபோனை திருடியதாக கூறி விசாரித்துள்ளனர். அப்போது தான் திருடவில்லை என்று அவர் கூறியுள்ளார். மீண்டும் மறுநாள் வீட்டிற்கு அழைத்து கடுமையாக அடித்து உதைத்து, அவமானப்படுத்தி உள்ளனர். அத்துடன் வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.
அந்த வாலிபர் தாக்கப்பட்ட காட்சிகள் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. அந்த பதிவுகளை போலீசார் கைப்பற்றி அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்
