'இந்தியா'வில்... 'பள்ளி' மற்றும் 'கல்லூரிகள்' திறப்பது எப்போது??... வெளியான லேட்டஸ்ட் 'தகவல்'!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக, நாடு முழுவதுமுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படவும் அனுமதியளிக்கப்படவில்லை. தற்போதும் நாடு முழுவதும் ஊரடங்கு அமலிலுள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடர்ந்து செயல்படாமல் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பல மாநிலங்களில் பள்ளிகளின் பொதுத் தேர்வு மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் தவிர மற்ற கல்வியாண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்தாண்டு டிசம்பர் மாதம் வரை இந்தியாவிலுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப் போவதில்லை என்றும் அதன் பிறகே பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். அதே வேளையில், அனைத்து கல்லூரிகளின் இறுதியாண்டு தேர்வுகளை இந்தாண்டு இறுதிக்குள் நடத்தி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் உறுதியளித்துள்ளார்.
தொடர்ந்து, செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட ஆரம்பிக்கும் என பரவலான தகவல் இருந்தது குறிப்பிடத்தக்கது.