குறைஞ்சபட்ச சம்பளமே ரூ.63 லட்சம்... "உழைக்கிறவங்களுக்கு நியாயமான சம்பளத்தை கொடுக்கனும்".. அதிரவைத்த CEO.. யாரு சாமி இவரு..?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Aug 09, 2022 08:26 PM

அமெரிக்காவை சேர்ந்த டான் ப்ரைஸ் என்னும் தொழிலதிபர் தற்போது வெளியிட்டுள்ள பதிவு பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.

Dan Price who pays over Rs 63 lakhs as minimum wage

Also Read | எவ்வளவு தண்ணீர் பாய்ந்தாலும் நிரம்பாத அதிசய கிணறு.. IIT நிபுணர்கள் கண்டறிந்த ஆச்சர்யம் அளிக்கும் உண்மை..!

டான் ப்ரைஸ்

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் கடந்த 1984 ஆம் ஆண்டு பிறந்த டான் ப்ரைஸ் தற்போது கிராவிட்டி பேமெண்ட்ஸ் (Gravity Payments) என்னும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு தன்னுடைய மூத்த சகோதரரான லூகாஸ் என்பவருடன் இணைந்து இந்நிறுவனத்தை துவங்கினார். இவர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இயங்கக் கூடியவர். இதனாலேயே பல லட்சக்கணக்கான மக்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். அதேபோல, எப்போதும் அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு நெட்டிசன்களை திகைக்க வைப்பது இவருடைய வாடிக்கை. அந்த வகையில் தற்போது இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பு இணைய வெளிகளில் பேசுபொருளாகியுள்ளது.

Dan Price who pays over Rs 63 lakhs as minimum wage

குறைந்தபட்ச ஊதியம்

டான் தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 80,000 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 63 லட்ச ரூபாய்) வழங்கிவருவதாக தெரிவித்திருக்கிறார். மேலும், பிற நிறுவனங்களும் இதேபோல ஊழியர்களுக்கு நியாயமான முறையில் ஊதியத்தை வழங்க முன்வரவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்," எனது நிறுவனம் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 80 ஆயிரம் அமெரிக்க டாலர்களை ஊதியமாக வழங்குகிறது. பணியாளர்கள் எங்கு வேண்டுமானாலும் இருந்து வேலை செய்ய அனுமதித்திருக்கிறோம். ஊதியத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு போன்ற முழுப் பலன்களையும் அளிக்கிறோம். ஒரு வேலைக்கு 300க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Dan Price who pays over Rs 63 lakhs as minimum wage

மேலும் அவர்," யாரும் பணிபுரிய தயாராக இல்லை என்பது நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சரியான முறையில் ஊதியத்தையோ மதிப்பையோ வழங்குவதில்லை என்பதை மோசமான முறையில் சொல்வதாகும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், டான் தனது இந்த பதிவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து நெட்டிசன்கள் இதுகுறித்து ஆர்வமாக விவாதித்து வருகின்றனர்.

Also Read | "இவங்க 2 பேருக்குமே தங்கப்பதக்கம் கொடுக்கணும்".. பாகிஸ்தான் வீரரின் பதிவில் நீரஜ் சோப்ரா போட்ட கமெண்ட்.. நெகிழ்ந்துபோன ஆனந்த் மஹிந்திரா..!

Tags : #CEO #SALARY #EMPLOYEES #DAN PRICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dan Price who pays over Rs 63 lakhs as minimum wage | World News.