சாலை விபத்தில் மரணமடைந்த முன்னாள் நடுவர்.. வீரேந்தர் சேவாக் நினைவுகூர்ந்த உருக்கமான சம்பவம்.. கலங்கிப்போன ரசிகர்கள்.!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் நடுவரான ரூடி கோர்ட்சன் இன்று சாலை விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also Read | பிடிச்சு கொடுத்தா 25,000ரூ பணம்.. மொத்த மாநில போலீசும் தேடிய நபர்.. பரபர பின்னணி..!
துவக்கம்
1981 ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக இருந்துவந்தார் ரூடி. 1992 ஆம் ஆண்டு, இந்தியாவின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது சர்வதேச ஒருநாள் போட்டியில் நடுவராக பணியாற்றுவதற்கான தனது முதல் வாய்ப்பைப் பெற்றார். தன்னுடைய 43 வது வயதில் முதல் டெஸ்ட் போட்டியில் நடுவராக பணியாற்றும் வாய்ப்பு அவருக்கு கிடைத்ததது. போர்ட் எலிசபெத்தில் அந்த டெஸ்ட் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 1992 இல் அவரை முழுநேர நடுவராக நியமித்தது. ரூடி 100 டெஸ்ட் மற்றும் 200 ஒருநாள் போட்டிகளில் பணியாற்றிய இரண்டாவது நடுவராக அறியப்படுகிறார். 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பைகளில் மூன்றாம் நடுவராகவும் ரூடி பணியாற்றினார். அதன்பின்னர், 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடருடன் இவர் ஓய்வு பெற்றார்.
சோகம்
இந்நிலையில், இன்று தென் ஆப்பிரிக்காவின் ரிவார்டேல் பகுதியில் நடைபெற்ற விபத்தில் ரூடி உயிரிழந்ததாக அவருடைய மகன் அறிவித்திருக்கிறார். இந்த விபத்தில் மேலும் 3 பேர் மரணமடைந்ததாக தெரிகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வீரேந்தர் சேவாக் ரூடியின் மறைவை முன்னிட்டு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
உங்களை மிஸ் செய்வேன்
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"ரூடியின் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள். அவருடன் எனக்கு நல்ல பிணைப்பு இருந்தது. நான் சொதப்பலான ஷாட் அடிக்கும் போதெல்லாம், “புத்திசாலித்தனமாக விளையாடு, உன் பேட்டிங்கை நான் பார்க்க விரும்புகிறேன்” என்று என்னைத் திட்டுவார். அவர் தனது மகனுக்கு ஒரு குறிப்பிட்ட பிராண்ட் கிரிக்கெட் பேட்களை வாங்க விரும்பினார். அதுபற்றி என்னிடம் விசாரித்தார். நான் அவருக்கு அந்த பேட்டை பரிசளித்தேன். அவர் மிகவும் நெகிழ்ந்துபோனார். அவர் ஒரு ஜென்டில்மேன் மற்றும் மிகவும் அற்புதமான நபர். உங்களை மிஸ் செய்வேன் ரூடி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் நடுவர் ரூடி கோர்ட்சனின் மறைவு கிரிக்கெட் உலகில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.