பெட்ரோல் பங்க் வந்த DINING TABLE.. வியந்து பார்த்த நெட்டிசன்கள்.. அதுக்கு ஆனந்த் மஹிந்திரா போட்ட கேப்ஷன் தான் 'அல்டிமேட்'..
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களின் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, இணையத்தில் எப்போதும் படு ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.
மிகப் பெரிய தொழிலதிபராக அவர் இருந்தாலும், இணையத்தில் அதிகம் நேரத்தை நாளுக்கு நாள் செலவிட்டு வருகிறார்.
ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ
தன்னைச் சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள் தொடர்பாக வீடியோக்கள் மற்றும் செய்திகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரும் ஆனந்த் மஹிந்திரா, அதில் திறமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நபர்களை பாராட்டவும் தவறுவதில்லை. சமீபத்தில் கூட, நெட்டிசன் ஒருவர், ஆனந்த் மஹிந்திராவின் qualification பற்றி கேட்க, அதற்கு அவர் தெரிவித்த பதில், இணையத்தில் லைக்குகளை அள்ளி இருந்தது. இப்படி, ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டர் டைம்லைன் எப்போதும் பல அற்புதமான வீடியோக்கள் மற்றும் செய்திகளால் நிரம்பிக் கிடக்கும் நிலையில், தற்போது அவர் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றும், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
பெட்ரோல் பங்க்கில் 'Dining Table'
பொதுவாக, ஒரு பெட்ரோல் பங்க்கில், பைக், கார், லாரி உள்ளிட்ட பல வகை வாகனங்கள் வந்து பெட்ரோல் அல்லது டீசல் போட்டுச் செல்வதை நாம் பார்த்துள்ளோம். ஆனால், ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள வீடியோவில், நான்கு இளைஞர்கள் Dining Table ஒன்றில் சுற்றி அமர்ந்திருக்க, வேகமாக பைக் போல இயங்கி வருகிறது அந்த டேபிள். மேலும், அந்த இளைஞர்கள் உணவு அருந்திக் கொண்டே இருக்க, பங்க்கில் பெட்ரோல் போட்டும் செல்கின்றனர். அதில் ஒருவர், மேசையில் இருக்கும் பைக்கின் கைப்பிடி போன்ற ஒன்றை இயக்கிச் செல்கிறார்.
கேப்ஷன் தான் ஹைலைட்டே..
இந்த வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, "இது E Mobility என்று நான் நினைக்கிறேன். இதில் 'E' என்பது Eat (சாப்பிடுவதை) என்பதைக் குறிக்கின்றது" என வேற லெவலில் ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இனிமேல் சாப்பிட்டுக் கொண்டே எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றும், வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகத்தில் சாப்பிடக் கூட நேரமில்லாத நம்மில் பலருக்கும், இந்த Dining Table வாகனம் உதவும் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
அதே போல, ஆனந்த் மஹிந்திராவின் கேப்ஷனும் பல நெட்டிசன்கள் மத்தியில், கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
