"டாடா மோட்டார்ஸ் பத்தி என்ன நினைக்குறீங்க??.." நெட்டிசன் கேட்ட கேள்வி.. சபாஷ் போட வைத்த ஆனந்த் மஹிந்திராவின் பதில்
முகப்பு > செய்திகள் > இந்தியாமுன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குறித்து தெரிவித்துள்ள கருத்து ஒன்று, ட்விட்டரில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | "11 வருசத்துக்கு முன்னாடியே.." சூர்யகுமார் பத்தி ரோஹித் போட்ட ட்வீட்.. "இப்போ செம வைரல் ஆயிருக்கு.."
மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, இணையத்தில் எப்போதும் படு ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.
மிகப் பெரிய தொழிலதிபராக அவர் இருந்தாலும், இணையத்தில் அதிக நேரத்தை நாளுக்கு நாள் செலவிட்டு வருகிறார்.
இணையத்தில் செம ஆக்டிவ்
தன்னைச் சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள் தொடர்பாக வீடியோக்கள் மற்றும் செய்திகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரும் ஆனந்த் மஹிந்திரா, அதில் திறமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நபர்களை பாராட்டவும் தவறுவதில்லை. சமீபத்தில் கூட, நெட்டிசன் ஒருவர், ஆனந்த் மஹிந்திராவின் qualification பற்றி கேட்க, அதற்கு அவர் தெரிவித்த பதில், இணையத்தில் லைக்குகளை அள்ளி இருந்தது. டைனிங் டேபிள் ஒன்றை மோட்டார் மூலம் இயங்க வைத்து, பெட்ரோல் போட்டுச் செல்லும் இளைஞர்கள் வீடியோவையும் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்திருந்தார்.
இப்படி, ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டர் டைம்லைன் எப்போதும் பல அற்புதமான வீடியோக்கள் மற்றும் செய்திகளால் நிரம்பிக் கிடக்கும் நிலையில், தற்போது அவர் டாடா மோட்டார்ஸ் குறித்து பகிர்ந்துள்ள கருத்து, அதிகம் வைரலாகி வருகிறது.
பிரபல ஆட்டோமொபைல் நிறுவனங்களான மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை, மாறி மாறி பெரும் போட்டிகளைக் கொண்டு இயங்கும் நிறுவனங்களாகும். இரண்டிலுமே நிறைய வாகனங்கள் அதிகம் உற்பத்தி ஆகி வரும் நிலையில், ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர், ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட்டில் கமெண்ட் ஒன்றை செய்திருந்தார்.
டாடா பற்றி பேசிய ஆனந்த் மஹிந்திரா
அதில், "சார், டாடா கார்கள் பற்றி உங்களின் Feelings என்ன?" என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த ஆனந்த் மஹிந்திரா, "டாடா மோட்டார்ஸ் போன்ற வலுவான போட்டியாளர்கள் இருப்பது ஒரு பாக்கியம். அவர்கள் எப்போதும் தங்களை தாங்களே புதுப்பித்து கொண்டிருப்பது, எங்களை சிறப்பாக இன்னும் வேலை செய்ய வேண்டும் என 'Inspire' செய்கிறது. போட்டி என்பது புதுமைகளை தூண்டுகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
ஆட்டோமொபைல் துறையில், தங்களுக்கு மிகப் பெரிய போட்டியாக விளங்கும் டாடா நிறுவனம் குறித்து, அசத்தலாக ஆனந்த் மஹிந்திரா சொன்ன விஷயம், தற்போது இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
Also Read | "ஆஹா, இவ்ளோ Galaxy இருக்கா??.." பிரபஞ்சத்தின் அதிசயம்.. உலகையே மிரள வைத்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

மற்ற செய்திகள்
