"தாஜ்மஹாலின் 22 மர்ம அறைகளை திறக்கணும்" மனுவை விசாரித்த நீதிபதிகள் கேட்ட சரமாரி கேள்விகள்.. என்ன ஆச்சு?
முகப்பு > செய்திகள் > இந்தியாதாஜ்மஹாலில் உள்ள 22 அறைகளை திறக்க உத்தரவிடவேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இதுகுறித்து சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.
22 அறைகள்
உலக அதிசயங்களுள் ஒன்றாக கருதப்படும் தாஜ்மஹாலில் 22 அறைகள் எப்போதும் பூட்டியே வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதை அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதால் அதனை திறந்து ஆய்வுமேற்கொள்ள உத்தரவிடவேண்டும் எனவும் ரஜ்னீஷ் சிங் என்பவர் பொதுநல மனு ஒன்றை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி டி.கே.உபத்யா மற்றும் சுபாஷ் வித்யார்த்தி அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதுக்கா நாங்க இருக்கோம்
விசாரணையின்போது ரஜ்னீஷ் சிங் தரப்பு வழக்கறிஞர்," தாஜ்மஹால் குறித்த உண்மைகளை அறிய மக்களுக்கு உரிமை உண்டு. ஆகவே, தாஜ்மஹாலில் உள்ள 22 அறைகளை திறக்கவேண்டும். தாஜ்மஹாலின் வரலாறு அதன் வயது தொடர்பாக உள்ள சந்தேகங்கள் தொடர்பான சில ஆவணங்களையும் இணைத்துள்ளேன்" என வாதிட்டார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த நீதிபதிகள்," தாஜ்மஹாலின் வயதில் சந்தேகம் என்றால், அதனை ஷாஜஹான் கட்டவில்லை எனச் சொல்ல வருகிறீர்களா? யார் தாஜ்மஹாலை கட்டியது என ஆய்வு செய்யவா இங்கு கூடியுள்ளோம்?" என கேள்வி எழுப்பினர்.
போய் படிச்சிட்டு வாங்க
இதனை தொடர்ந்து, எதன் அடிப்படையில் தாஜ்மஹாலில் உள்ள அறைகளை திறக்க நீதிமன்றத்தை அணுகியுள்ளீர்கள்? என நீதிபதிகள் கேட்க,"நாட்டின் குடிமகன் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றத்திற்கு வந்துள்ளோம்" என பதிலளித்தது ரஜ்னீஷ் சிங் தரப்பு.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தரவுகளை மட்டுமே பெறமுடியும். ஆராய்ச்சி செய்ய உத்தரவிடும்படி அந்த சட்டத்தில் எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது? தாஜ்மஹால் குறித்த சந்தேகங்கள் இருந்தால் MA ,JRF உள்ளிட்ட படிப்புகளை முடித்துவிட்டு நீங்களே ஆய்வு செய்யுங்கள். அப்போது அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றத்திற்கு வாருங்கள். இன்று தாஜ்மஹாலை திறக்கச் சொல்லும் நீங்கள் நாளை நீதிபதிகளின் அறைகளுக்குள் செல்லவும், ஆய்வு செய்யவும் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைப்பீர்களா? நீதிமன்றத்தில் இதுபோன்று நடந்துகொள்ளாதீர்கள்" என அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8