‘இனிமேல் யூடியூபில் இதெல்லாம் கிடையாது..’ யூடியூப் நிறுவனத்தின் புதிய தடை அறிவிப்பு..?
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Jun 06, 2019 06:01 PM
இனவெறியைத் தூண்டும் வீடியோக்களைத் தடை செய்யப்போவதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்நிறுவனத்தின் அறிவிப்பில், “யூடியூப் நிறுவனம் எப்போதும் வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான கொள்கையையே கொண்டுள்ளது. தற்போது அதன் ஒரு பகுதியாக பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஒரு இனம் உயர்ந்தது போல சித்தரிக்கும் வீடியோக்களை யூடியூபிலிருந்து தடை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கொள்கை உடனடியாக அமலுக்கு வருகிறது. இதை முழுமையாக அமல்படுத்த சில மாதங்கள் ஆகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நியூசிலாந்து மசூதி ஒன்றில் நடைபெற்ற தாக்குதல் சமூக வலைத்தளங்களில் நேரலையாக ஒளிபரப்பானது. அதைத் தொடர்ந்து தாமாகவே முன்வந்து சமூக வலைத்தளங்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
Tags : #YOUTUBE #BAN
