#BREAKING:அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு: 38 பேருக்கு மரண தண்டனை.. சிறப்பு நீதிமன்றம் அதிரடி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றத்தால் தீர்ப்பு அளிக்கப்பட்ட 49 பேரில் 38 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
பாபர் ஆஸத்தை கிரவுண்டில் வைத்து திட்டிய வாசிம் அக்ரம்..என்னதான் ஆச்சு. வைரல் வீடியோ..
கடந்த 2008 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் அகமாதாபாத்தில் தொடர் வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. சுமர் 70 நிமிட இடைவெளியில் 21 வெடி குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இந்த தொடர் தாக்குதலில் 56 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 240 பேர் காயம் அடைந்தனர்.
வழக்கு பதிவு
நாட்டையே உலுக்கிய இந்த குண்டுவெடிப்பு குறித்த விசாரணையில் 77 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அகமதாபாத் சிறப்பு நீதி மன்றத்தில் இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வந்தது. குற்றம் சாட்டப்பட்ட 77 பேரில் 49 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில், அவர்களில் 38 பேருக்கு மரண தண்டனையும் 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிப்பதாக நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
டேக் ஆப் செய்யும்போது விமானத்தில் ஏற்பட்ட சிக்கல்.. குறுக்க வந்த ட்ரக்.. பதறவைக்கும் வீடியோ..!
உலுக்கிய சம்பவம்
2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா கலவரத்திற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் விசாரணையின் போது தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்திய முஜாஹிதீன் அமைப்புடன் தொடர்புடையதாக சொல்லப்பட்ட 82 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணை
உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக 1100 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் 26 பேர் முக்கிய சாட்சிகளாக எடுத்து கொள்ளப்பட்டனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக சபர்மதி மத்திய சிறையில் நடத்தப்பட்ட இந்த வழக்கு விசாரணை பின்னர், வீடியோ கான்பெரன்ஸ் மூலமாக நடத்தப்பட்டது. இதில் வெவ்வேறு சிறைகளில் வைக்கப்பட்டியிருந்த குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் காணொளி வாயிலாக விசாரணை செய்யப்பட்டனர்.
49 பேர் குற்றவாளிகள்
13 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கில் சிறப்பு நீதிபதி ஏ.ஆர்.பட்டீல் கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட 77 பேரில் 49 பேர் குற்றாவாளிகள் என்றும் மீதி 28 பேரை விடுவிப்பதாகவும் பாட்டீல் குறிப்பிட்டிருந்தார். குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் பின்னர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மரண தண்டனை
இந்நிலையில், இன்று இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை விபரத்தை நீதிமன்றம் வெளியிட்டது. அதில், 38 பேருக்கு மரண தண்டனை விதிப்பதாகவும் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.
13 ஆண்டுகளுக்கு பிறகு அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகி இருப்பது இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.