பாபர் ஆஸத்தை கிரவுண்டில் வைத்து திட்டிய வாசிம் அக்ரம்..என்னதான் ஆச்சு. வைரல் வீடியோ..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்த கராச்சி கிங்ஸ் அணி, கடந்த 16 ஆம் தேதி நடப்பு சேம்பியனான முல்தான் சுல்தான்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியின்போது, கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனுமான பாபர் ஆஸத்தை முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம் திட்டும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது. இந்நிலையில், இதுகுறித்து அக்ரம் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் ஒன்றினை அளித்து உள்ளார்.

"நல்லா சிரி தாத்தா.." 100 ஆவது வயதில் மீண்டும் திருமணம்.. குடும்பத்தினர் புடை சூழ நடந்த திருவிழா
பாகிஸ்தான் சூப்பர் லீக்
இந்த வருடத்திற்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி, கராச்சி கிங்ஸ் அணி முல்தான் சுல்தான்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது. லாஹூரின் கடாபி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் 174 ரன்களை கராச்சி கிங்ஸ் அணி எடுத்தது.
இதனையடுத்து விளையாடிய முல்தான் சுல்தான்ஸ் அணி 19.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. ஏற்கனவே 8 போட்டிகளில் தோற்றதால் பிளே ஆப் வாய்ப்பை தவற விட்டிருக்கும் கராச்சி கிங்ஸ் அணியின் அடுத்த தோல்வி ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது.
வாசிம் அக்ரம் ஆவேசம்
இந்நிலையில், நேற்றைய போட்டியில் கராச்சி கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் வாசிம் அக்ரம் ஆவேசமாக பாபர் ஆசாத்தை திட்டும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது. இதுகுறித்து, மேட்ச் முடிந்த பின்னர் அக்ரம் விளக்கம் ஒன்றினையும் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் விளக்கியுள்ளார். கராச்சி கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் யார்க்கர் அல்லது அவுட்சைட் ஆஃபில் ஸ்லோ பந்துகளை வீசாததன் காரணமாக வாசிம் அக்ரம் அதிருப்தி அடைந்தார்.
இதுகுறித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் அக்ரம்," நேற்று நான் பாபர் ஆஸத்துடன் பேசியது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. நான் அவரிடம் "நம்முடைய பவுலர்கள் ஏன் யார்க்கர் அல்லது அவுட்சைட் ஆஃபில் ஸ்லோ பந்துகளை வீசவில்லை?" எனக் கேட்டேன். வேறொன்றும் இல்லை. பாபர் ஆஸம் மிகச் சிறந்த மனிதர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மைதானத்திலேயே பாபர் ஆஸத்தை பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் திட்டியது சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
டேக் ஆப் செய்யும்போது விமானத்தில் ஏற்பட்ட சிக்கல்.. குறுக்க வந்த ட்ரக்.. பதறவைக்கும் வீடியோ..!
what's happening here 🥲
Wasim Akram You can't do this with Babar Azam #BabarAzam #KarachiKings #Rizwan#Khushdil Shah pic.twitter.com/qGuJoJl5fB
— Samra Khan 🇵🇰 (@cric_girl007) February 16, 2022

மற்ற செய்திகள்
