'14 நாட்கள்' தனிமைப்படுத்தலுக்குப் 'பிறகு...' '25 நாட்கள்' கடந்து தென்பட்ட 'கொரோனா அறிகுறிகள்...' 'குழப்பத்தில் மருத்துவர்கள்...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Apr 17, 2020 04:24 PM

நெல்லையிலிருந்து பஞ்சாப் சென்று வந்த பெண்ணுக்கு 25 நாட்களுக்கு பிறகு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

nellai women affected covid 19 after 25 days - doctors confused

நெல்லை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 64 வயது மூதாட்டி ஒருவர், தனது சகோதிரியின் மகளை கல்லூரியில் சேர்க்க கடந்த மாதம் பஞ்சாப் சென்றார். இதையடுத்து அவர் ரயில் மூலம் நெல்லை திரும்பி உள்ளார்.

இதனால் அவரை 14 நாட்கள் அவரை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறுவுறுத்தி உள்ளனர். அவரும் தன்னை வீட்டிலேயே தொடர்ந்து 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

14 நாட்களுக்கு பிறகு வைரஸ் தொற்று அறிகுறிகள் எதுவும் இல்லாததால் அவருக்கு கண்காணிப்பு விளக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, அவர் மளிகைக் கடைகள் மற்றும் அக்கம்பக்கத்திற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இந்தநிலையில் 25 நாட்களுக்கு பிறகு மூதாட்டிக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட  ஆரம்பித்தது. இதையடுத்து மருத்துவமனையை அணுகிய அவருக்கு பரிசோதனை நடைபெற்றது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து அவரது மகன், அவருடன் பஞ்சாப் சென்ற சகோதரியின் மகள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் பல்வேறு கடைகளுக்கு சென்றுவந்த நிலையில், அப்பகுதியில் உள்ளவர்களுக்கும் கொரோனா அறிகுறி உள்ளதா என சுகாதாரப் பணியாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

வழக்கமாக 14 நாட்களில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்படும் என்கிற அடிப்படையிலேயே, வெளிநாடு அல்லது வெளியூர் சென்றுவந்தவர்கள் வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். ஆனால் நெல்லையைச் சேர்ந்த இப்பெண்மணிக்கு 25 நாட்களுக்கு பிறகு அறிகுறிகள் தென்பட்டு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது மருத்துவர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.