‘‘இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்’... ‘களமிறங்கும் ஆல்ரவுண்டர் மன்னன்'... ‘அப்படி என்ன ஸ்பெஷல்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Aug 14, 2019 11:43 AM
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம்பிடித்துள்ள ரகீம் கார்ன்வால், கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை தனது பக்கம் ஈர்த்துள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில், பெர்முடா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், இந்திய வீரர் உத்தப்பா ஆட்டமிழந்ததை ரசிகர்கள் எளிதில் மறந்துவிட முடியாது. ஏனெனில் அதிக எடை கொண்ட பெர்முடா அணி வீரர் லிவராக்கின் அற்புதமான கேட்சில் உத்தப்பா ஆட்டமிழந்தார். இந்த அசத்தல் கேட்ச், ரசிகர்கள் மத்தியில் அப்போது வியப்புடன் பேசப்பட்டது. பெர்முடா வீரர் லிவராக்கின் உடல் எடை 127 கிலோவாகும். ஆனால் அவரையும் மிஞ்சும் எடை கொண்ட வீரர் ஒருவர் மேற்கிந்திய தீவுகள் அணியில் தற்போது இடம் பிடித்துள்ளார்.
அவரது பெயர் ரஹீம் கார்ன்வால். 26 வயதான இவர், 6.6 அடி உயரம், 140 கிலோ எடை கொண்டவர். உள்ளூர் டி20 போட்டிகளில் இமாலய சிக்சர்களை பறக்கவிட்டுள்ளார் கார்ன்வால். பேட்டிங்கை போலவே சுழற்பந்துவீச்சிலும் அசத்தி வரும் கார்ன்வால், சிறந்த ஆல்ரவுண்டராக உள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், முன்னணி வீரர்களான புஜாரா, விராட் கோலி, ரஹானே உள்ளிட்ட 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார் ரகீம் கார்ன்வால்.
இதுவரை உடல் தகுதியை நிரூபிக்க முடியாமல் திணறி வந்த அவர், உடல் தகுதியை நிரூபித்து, வரும் 22-ம் தேதி துவங்கும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், கார்ன்வால் இடம்பெற்றிருக்கிறார். இந்த டெஸ்ட் போட்டியில் கார்ன்வால் களம் இறங்கினால், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் மிகப்பெரிய வீரர் என்ற அரிய சாதனையை படைப்பார். பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் மிரட்டும் கார்ன்வால் இந்திய அணிக்கு நிச்சயம் நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கலாம். மேலும் டெஸ்ட் போட்டியில் தேர்வானப் பிறகு, எடையை குறைப்பதற்கான பயிற்சிகளையும் ரகீம் மேற்கொண்டு வருவதாக, அந்த அணி தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிடத்தக்கது.