'அவருக்கு கொரோனா இருக்கும்னு நினைக்குறேன்...' 'வீட்லலாம் ஏத்த முடியாது...' 'மனைவி வீட்டுக்குள்ள விடலன்னு தெருவில் நின்ற கணவர்...' கடைசியில்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆதரவற்ற காப்பகத்தில் இருந்து வெகுநாள் கழித்து வீடு திரும்பிய கணவரை கொரோனா பயம் காரணமாக மனைவி வீட்டிற்குள் அனுமதிக்காத சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துவாக்குடி மலைப் பகுதியில் பாவா என்பவர் வசித்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன் மனைவி மற்றும் பிள்ளைகளை தவிக்கவிட்டு வீட்டை விட்டு ஓடி திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
கொரோனா ஊரடங்கின் போது காப்பகத்தில் இருந்து வெளியே சாலையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சாலை ஓரம் வாழ்பவர்களை மீட்கும் சமூக ஆர்வலர்கள் பாவாவையும் மீட்டுள்ளனர்.
மேலும் அவருடைய முகவரியை கேட்டு திருச்சி, துவாக்குடி மலை, மகாத்மா காந்தி தெருவில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்றிரவு விட்டுச் சென்றனர். ஆனால் தன் கணவர் வீட்டை விட்டு ஓடும் போதே காச நோயால் பாதிப்படைந்திருத்ததாலும், தற்போது மிகவும் ஒல்லியாக காணப்பட்டதால் ஒரு வேளை தன் கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என பயந்து பாவாவை அவரது மனைவி வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.
நேற்று மாலை முதல் இரவு 12 மணி வரை தெருவிலேயே இருந்துள்ளார். அதன் பின் 108 வாகனத்திற்கு போன் செய்த அப்பகுதி மக்கள் பாவாவை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.