‘சியாச்சின் மலையில் திடீர் பனிச்சரிவு’!.. ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Nov 18, 2019 11:24 PM

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி இந்திய ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

4 soldiers, 2 porters killed in avalanche in the Siachen Glacier

சியாச்சின் மலைப்பகுதியில் வடக்கு கிளாசியரில் ராணுவ வீரர்கள் முகாமிட்டிருந்தனர். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 19,000 அடி உயரம் கொண்ட இந்த மலையில் இன்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பணியில் இருந்த ராணுவ வீரர்கள் பல சிக்கியுள்ளனர். இதனை அடுத்து பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பனிச்சரிவில் 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : #INDIANMILITARY #AVALANCHE #INDIANARMY #SIACHEN