'இனிமேல் இங்கையும் நாங்க தெறிக்க விடுவோம்'...'இந்திய ராணுவ' வரலாற்றில் முதல் முறையாக!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 25, 2019 05:00 PM

இந்திய ராணுவ வரலாற்றில் முதல் முறையாக போலீஸ் படைப்பிரிவில் பெண்கள் சேர்க்கப்பட உள்ளார்கள்.இது பெண்களுக்கான மிக பெரிய கௌரவமாக கருதப்படுகிறது.

Indian Army puts out ad inviting women to join Military Police

இந்தியாவின் தலைமை ராணுவத் தளபதியாக பிபின் ராவத் பொறுப்புக்கு வந்தபோது, ராணுவத்தின் அனைத்து மட்டத்திலும் பெண்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று உறுதியளித்திருந்த நிலையில்,தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்திய ராணுவத்தில் அதிகாரிகள் மட்டத்தில் மட்டுமே பெண்கள் சேர்க்கப்பட்டு வந்தனர். தற்போதுதான் இந்திய ராணுவ வரலாற்றில் முதன்முறையாக ராணுவத்தின் போலீஸ் படைப்பிரிவில் வீரர்களாகப் பெண்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே ராணுவத்தில் பெண் வீரர்கள் நியமிக்கப்படும் வழக்கம் இருந்து வருகிறது.சண்டையிடுவதில் பெண்களுக்கு இருக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்திய ராணுவத்தில் போலீஸ் படைப்பிரிவில் பெண்கள் நியமிக்கப்படுவதில்லை.இந்நிலையில் இந்தியாவின் தலைமை ராணுவத் தளபதியாக பிபின் ராவத் பொறுப்பேற்ற பிறகு,பல மாற்றங்களை கொண்டு வந்தார்.அந்த வகையில் ராணுவத்தின் போலீஸ் படைப்பிரிவில் பெண்களைச் சேர்ப்பதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே வருங்காலத்தில், ராணுவத்தின் அனைத்துப் பிரிவிலும் 20 சதவிகிதம் அளவுக்குப் பெண்கள் சேர்க்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ள பெண்கள், இந்திய ராணுவத்தின் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் ஜூன் 8 ஆகும்.

Tags : #INDIANMILITARY #MILITARY POLICE #INDIAN ARMY