'கணவருக்கு இறுதி மரியாதை'...'விமானி உடையில் மனைவி'...வெள்ளத்தின் போது மக்களை காப்பாற்றியவர்!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Jeno | Mar 02, 2019 11:43 AM
ஜம்மு காஷ்மீரின் புட்காம் பகுதியில், இந்திய விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த விமானப்படை விங் கமாண்டர் ஸ்குவாட்ரோன் லீடர் சித்தார்த் வஷிஸ்த்க்கு நேற்று அரசு ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்றது.

கடந்த புதன் அன்று காலை ஸ்ரீநகர் விமான நிலையிலிருந்து புறப்பட்ட எம்ஐ-17 ஹெலிகாப்டர்,பறக்க ஆரம்பித்த சில சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. பட்காம் அருகே நடந்த இவ்விபத்தில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் உயிரிழந்த ஸ்குவாட்ரோன் விமானப்படை விங் கமாண்டர் ஸ்குவாட்ரோன் லீடர் சித்தார்த் வஷிஸ்த்தின் உடல்,சண்டிகரில் உள்ள அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது.
உயிரிழந்த சித்தார்த் வஷிஸ்த்தின் உடலிற்கு ஏராளமான விமானப்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.உயிரிழந்த விமானியின் மனைவி ஆர்த்தி சிங்கும் ஸ்ரீநகரில் உள்ள விமானப்படையில் விங் கமாண்டர் ஸ்குவாட்ரோன் லீடாராக பணியாற்றி வருகிறார்,இறுதி சடங்கிற்கு அவர் விமானி உடையில் வந்து தனது கணவருக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.இது காண்போரின் கண்களை குளமாக்கியது.சித்தார்த்,ஆர்த்தி தம்பதியருக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது.
கேரள வெள்ளத்தின் போது சித்தார்த் வஷிஸ்த் மீட்பு பணிகளில் ஈடுபட்டு பல்வேறு மக்களை காப்பாற்றினார்.இதற்காக கடந்த குடியரசு தினத்தின் போது பாராட்டுச் சான்றிதழைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
This is Squadron Leader Aarti Singh, wife of Squadron Leader Siddharth Vashisht who was pilot of the Mi-17 that crashed in Budgam on Wednesday. He was cremated in Chandigarh today. RIP. pic.twitter.com/UUMeT120Id
— Shiv Aroor (@ShivAroor) March 1, 2019
