‘வலிமையாக இருப்போம்’ இந்திய ராணுவம் பகிர்ந்துள்ள உணர்ச்சிமிக்க கவிதை!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Feb 26, 2019 02:36 PM
இந்திய ராணுவம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய வீரர்களின் வலிமை குறித்த கவிதை ஒன்றை பகிர்ந்துள்ளது. இந்த கவிதை வைரலாகி வருகிறது.

முன்னதாக ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட துணை நிலை ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இந்த நிலையில், இதற்கு தக்க பதிலடியாக பாலாகோட் பகுதியில் முகாமிட்டிருந்த தீவிரவாத அமைப்பின் மீது இந்தியாவின் தரப்பில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மிராஜ் ரக போர் விமானங்களைக் கொண்டு இன்று அதிகாலை 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டுகளுடன் இந்திய ரணுவப்படை சென்று பாலாகோட், சக்கோத்தி மற்றும் முஸாஃபராபாத்தில் பகுதிகளில் இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்களை அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியலாளர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பிரபலங்கள், சமூக வலைதள வாசிகள் என பலரும் இந்தியாவின் இந்த அதிரடி தாக்குதலை பாராட்டி வரும் நிலையில், இந்திய ராணுவம் தனது ட்விட்டர் பக்கத்தில் நாம் வலிமையுள்ளவர்களாக இருப்பது குறித்த கவிதையினை பகிர்ந்துள்ளது. இந்தி கவிஞர் ராம்தாரி சிங்கால் எழுதப்பட்டு, இந்திய ராணுவத்தின் மக்கள் தொடர்புத்துறை கூடுதல் தலைமை இயக்குநர் அலுவல் ரீதியான ட்விட்டர் பக்கதில் பதிவிட்டு பின்னர், தமிழ் இந்து இணைய இதழில் வெளியான அந்தக் கவிதையின் தமிழ் வடிவத்தை இங்கு காணலாம்.
‘எதிரிக்கு முன்னால் அமைதியாகவும் கீழ்படிகிறவர்களாகவும் நீங்கள் இருந்தால், உங்களைக் கோழை என்றே எதிரிகள் கருதுவார்கள். பாண்டவர்களைக் கெளரவர்கள் நடத்தியதுபோல. வலிமையான இடத்திலும் வெற்றி பெறும் நிலையிலும் இருந்தால் மட்டுமே, உங்களால் அமைதியைப் பற்றிப் பேசமுடியும்’ என்பதுதான் ராம்தாரி சிங் எழுதிய கவிதையின் உட்கரு. இதேபோல் புல்வாமா தாக்குதல் நிகழ்ந்த சமயத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவும் அதுகுறித்த கவிதை ஒன்றை எழுதியது குறிப்பிடத்தக்கது.
