'இந்தியாவை உலுக்கிய 2 வழக்குகள்!'.. ஒரே மாதிரி நிகழ்ந்த மரணங்கள்.. இணையவாசிகள் விடுக்கும் கோரிக்கை கருத்துக்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியத் திரை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக திரைப் பிரபலங்களின் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி மும்பை பந்த்ரா வீட்டில், ‘தோனியின்’ வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் தோனி பாத்திரத்தை ஏற்று இன்ஸ்பிரேஷன் தரும் கதையில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை அடுத்து, அவர் தற்கொலைக்குத் தூண்டப்பட்டது, அவருடைய மேனேஜர் மரணம், அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி அவருக்கு போதை மருந்து உட்கொள்ள உதவியது என பல கோணங்களில் தொடங்கி இன்று வரை பாலிவுட்டை அதிரவைக்கும் வழக்காக அந்த வழக்கு நீண்டு கொண்டிருக்கிறது.
இதேபோல், தமிழகத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சின்னத்திரை நடிகையும், விளம்பர மாடல், தொகுப்பாளினி, நடனம் என பன்முகத் திறன் கொண்ட திருவான்மியூரைச் சேர்ந்த விஜே சித்ரா சென்னை நசரத் பேட்டை ஸ்டார் ஹோட்டலில் இன்று அதிகாலை தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே அவருடைய கன்னத்தில் காயம் இருந்தததாக தகவல்கள் வெளியானதுடன், அவர் தற்கொலையின் மீது கொலையா? என்கிற சந்தேகம் இருப்பதாக சித்ராவின் தந்தை புகார் அளித்துள்ளார். இந்நிலையில் சுஷாந்த் சிங் மரணத்துடன் சித்ராவின் மரணத்தை ஒப்பிட்டு, இந்திய கலையுலகை உலுக்கிய இந்த இரு மரணங்களும் வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என சமூக வலைதள வாசிகள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அத்துடன், சித்ராவின் தற்கொலை சமயத்தில் அவருடன் தங்கி இருந்த ஹேமந்த் ரவி, அந்நேரத்தில் வெளியில் சென்றுவிட்டு, ஹோட்டலுக்கு திரும்பியபோது அறைக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், அவர் நிர்வாகத்திடம் சாவி வாங்கிதான் கதவை திறந்திருக்கிறார். அவர் விசாரிகப்பட்டு வரும் நிலையில், அவர் தனக்கும் சித்ராவுக்கும் பதிவுத்திருமணம் நடந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.