'சோஷியல் மீடியாவுல எப்பவும் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்!'... 'கலங்க வைத்த சின்னத்திரை நடிகை!'.. யார் இந்த ‘விஜே சித்ரா’?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 09, 2020 12:31 PM

சின்னத்திரையில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகை விஜே சித்ரா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த, இவர் இல்லத்தரசிகளிடையே பிரபலமான நடிகையாகவே மாறினார்.

Who is VJ Chithra Vijay TV Pandian Stores Serial Actress Suicide

1992 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி பிறந்த இவர் திருவான்மியூரை சேர்ந்த இவர் சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் இளங்களை, 2012 - 14ஆம் ஆண்டு எம்.எஸ்சி உளவியல் படிப்பை சென்னை எஸ்ஐடி கல்லூரியில் முடித்திருக்கிறார்

2014ல் முதன் முதலில் ஜெயா டீவியில் மன்னன் மகள் என்னும் சீரியலில் வைஷாலி என்னும் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, தொடர்ந்து, சன் டிவியில் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில், பெரிய பாப்பா கதாபாத்திரம் ஏற்று நடித்தார். பிரபலமான துணிக்கடைகள், தனியார் மருத்துவமனை, சமையல் எண்ணெய் ஆகிய விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார் சித்ரா. மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தன் பயணத்தை தொடங்கி, சன், ஜீ தமிழ், வேந்தர் உள்ளிட்ட தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சி, தொடர்களில் பங்காற்றினார்.

இவரது தந்தை காமராஜ், ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஆவார். அண்ணன், தற்போது சென்னை அண்ணாநகர் போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம்தான் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

எப்போதும் வண்ணமயமான புகைப்படங்களை, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கங்களில் பகிர்ந்து ஆக்டிவாக இருந்து வந்த இவர், தற்கொலைக்கு முதல் நாள் கூட, பிரபல நட்சத்திர நண்பர்களுடன் சகஜமாக பேசியுள்ளதாக அவர்கள் தெரிவித்து துக்கத்தை பகிர்ந்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Who is VJ Chithra Vijay TV Pandian Stores Serial Actress Suicide | Tamil Nadu News.