VIDEO: 'குளித்து முடித்த பின்... ஜே.சி.பி.யிடம் வந்து இந்த முதியவர் என்ன செய்கிறார் தெரியுமா'?.. நீங்களே பாருங்கள்... இணையத்தை கலக்கும் 'வைரல்' வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Oct 15, 2020 07:01 PM

முதியவர் ஒருவர் முதுகு சொறிய ஜே.சி.பி பயன்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

bizarre man uses jcb to scratch his back funny viral video

கட்டுமானம், விவசாயம், இடிப்புப்பணி, பூமி தோண்டுதல், அகழ்வுப் பணிக்காக ஜே.சி.பி இயந்திரம் பயன்படுத்த படுகின்றது. அவ்விதம் பயன்படுத்த பட்ட ஜே.சி.பி இயந்திரத்தை கொண்டு முதியவர் ஒருவர் வேலை முடிந்த பின்னர் தனது முதுகினை சொறிந்து கொள்ள பயன்படுத்தியுள்ளார்.

துண்டால் முதுகினை சொறிந்த பின்னரும் அது திருப்தி அளிக்காத காரணத்தால், ஜே.சி.பி ஆபரேட்டரை கொண்டு இயந்திரத்தை இயக்க வைத்து சொரிந்து கொள்கிறார். கிரேன் ஆபரேட்டரும், முதியவரும் விளையாட்டாக செய்யும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் இந்த வீடியோ 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும், 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், பெற்று வைரலாகி வருகின்றது.

விளையாட்டாக பார்க்கப்பட்டாலும் பலரும் விளையாட்டு வினையாகக் கூடாது என முதியவரையும் , கிரேன் ஆப்ரேட்டரையும் எச்சரிக்கின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bizarre man uses jcb to scratch his back funny viral video | India News.