VIDEO: அப்டி என்ன கோவம்னு தெரியலயே.. மணமகன் ஊட்டிவிட்ட அந்த ‘ஸ்வீட்டை’ தூக்கி வீசிய மணப்பெண்.. ‘செம’ வைரல்..!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்மணமேடையில் மணமகன் மீது மணமகள் கோபப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சத்தமில்லாமல் தமிழகத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த ஓவைசி கட்சி.. எங்கு தெரியுமா..?
மனிதனின் வாழ்வில் திருமணம் என்பது ஒரு முக்கியமான தருணமாகப் பார்க்கப்படுகிறது. அப்போது நடக்கும் எல்லா விஷயங்களும் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவுகளாக இருக்கும். இந்த நாளில் சந்தோஷமான விஷயங்களே நடக்க வேண்டும் என எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில் மாலை மாற்றிக்கொண்ட பின் தம்பதிகள் இருவரும் மணமேடையிலேயே ஒருவர் மீது ஒருவர் கோபப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
அதில் மணமேடையில் மணமக்கள் மணகோலத்தில் நிற்கின்றனர். மணப்பெண் சிவப்பு நிற லெகன்ஹாவும், மணமகன் கோட் சூட் அணிந்துள்ளனர். அப்போது மணமகன் கையில் பர்பியை கொடுத்து மணப்பெண்ணிற்கு ஊட்ட சொல்கிறார்கள். இதை வாங்கிய மணப்பெண் அந்த பர்பியை கோபமாக தூக்கி வீசி விடுகிறார். இதனால் மணமகன் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனை அடுத்து மணமகள் கையில் ஒரு டம்ளரில் பால் கொடுத்து மணமகனுக்கு கொடுக்க சொல்கின்றனர். அதை மணப்பெண் கொடுத்த போது மணமகன் அந்த டம்பளரை தட்டிவிட, அதையும் மணப்பெண் கோபமாக தூக்கி வீசினார். மணமகளும், மணமகனும் மாறி மாறி கோபமடைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
வெற்றி பெற்றதும் திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளர்.. அதிர்ச்சியில் அதிமுகவினர்..!

மற்ற செய்திகள்
