'சம்பளம், போனஸ்ல நாங்க எதுவும் கை வைக்கல...' இங்க வொர்க் பண்ணி 'ரிட்டயர்ட்' ஆனவங்களுக்கும் 'அந்த விஷயத்தை' பண்றோம்...! - பிரபல கம்பெனியின் நிறுவனர் தகவல்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 44-ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று (24-06-2021) நடைபெற்ற நிலையில் முகேஷ் அம்பானியின் மனைவியும், ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனின் நிறுவனருமான நிடா அம்பானி பேசிய காணொளி தற்போது வைரலாகி உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பொதுக்கூட்டத்தில் இந்த கொரோனா காலத்தில் தங்கள் ஊழியர்களை இழந்ததை குறித்தும், அவர்களின் இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடிகளையும் குறித்து பேசியுள்ளனர்.
அதில், 'கோவிட்-10 கொள்ளை நோய் நம்மிடையே மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கி, மனிதநேயத்தையே கொரோனா பரிசோதித்துவிட்டது.
இந்த இக்கட்டான மற்றும் மோசமான காலகட்டத்திலும் நாம் மக்களாக ஒன்றிணைந்து போராடியுள்ளோம். நம்முடைய ஊழியர்களின் சம்பளம், போனஸ், இழப்பீடு என எதையும் நாங்கள் குறைக்கவில்லை.
அதோடு இந்த இரண்டாம் அலையில் மக்களுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டப்போது நாம் உயர்தர தூய்மையான மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்தோம்.
இதுவரை நாம் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ததில்லை. ஆனால் தேவை ஏற்பட்டபோது இரண்டே வாரங்களில் தினம் 1100 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்தோம்.
மேலும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தடுப்பூசி சுரக்ஷா திட்டத்தின் கீழ் ஓய்வுபெற்ற ஊழியர்கள், கூட்டணி நிறுவனங்களின் ஊழியர்கள், ஊழியர்களின் குடும்பங்கள் உள்பட 20 லட்சம் பேருக்கு இலவசமாக தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் செய்த காரியங்களை கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
