'எனக்கு உயரமான பையன் தான் வேணும்'... 'விடாப்பிடியாக இருந்த பெண்'...'ஆனா ஒரு நொடியில் நடந்த அந்த சம்பவம்'... இது தான் சார் காதல் மேஜிக்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Jun 25, 2021 05:42 PM

ஒருவர் மீது காதல் வந்துவிட்டால் நமது கண்ணுக்கு முன்னால் வேறு ஏதும் தெரியாது, அந்த காதல் மட்டுமே இருக்கும் என்பதை நிரூபிக்கும் வண்ணம் நடந்துள்ளது இந்த சம்பவம்.

Couple Sets World Record For Biggest Height Difference

பிரித்தானியாவில் லண்டனைச் சேர்ந்தவர் ஜேம்ஸ், 33. இவர் தொலைக்காட்சி நடிகர் மற்றும் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷோலி, 27 ஆசிரியையாக பணியாற்றுகிறார். இவர்கள் 2013-ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதில் சிறப்பு என்னவென்றால், ஜேம்ஸ்சின் உயரம் 109.3 செ.மீ (3 அடி 7 அங்குலம்), ஷோலியின் உயரம் 166.1 செ.மீ., (5 அடி 5.4 அங்குலம்).

Couple Sets World Record For Biggest Height Difference

இருவருக்குமான உயர வித்தியாசம், 56.8 செ.மீ., (1 அடி, 10 அங்குலம்) கிட்டத்தட்ட 2 அடி ஆகும். இந்த உயர வித்தியாசமே, இவர்கள் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததற்கான காரணமாக அமைந்தது.  இந்த சிறப்புத் தம்பதிக்கு ஆண் உயரம் குறைவு, பெண் உயரம் அதிகம் என்ற பிரிவில் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது. ஜேம்ஸ் Diastrophic Dysplasia என்ற மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டதால் இவரது எலும்பு மற்றும் உடல் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.

Couple Sets World Record For Biggest Height Difference

இந்நிலையில் இந்த தம்பதிக்குள் காதல் மலர்ந்த சம்பவம் மிகவும் சுவாரசியமான ஒன்றாகும். ஷோலி தனது வருங்கால கணவர் குறித்து பல்வேறு கனவுகளை வைத்திருந்தார். அவர் நல்ல உயரம், பார்க்க நல்ல உடல்வாகுவோடு இருக்க வேண்டும் எனப் பல எண்ணங்களைத் தனது மனதில் வைத்திருந்தார். இந்த சூழ்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு ஜேம்ஸ் தனது சொந்த ஊர் வழியாக ஒலிம்பிக் ஜோதியை எடுத்துச் சென்றுள்ளார்.

Couple Sets World Record For Biggest Height Difference

அப்போது சில நண்பர்கள் அவரை ஷோலிக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்கள். ஜேம்ஸை பார்த்த அந்த ஒரு நொடியிலேயே ஷோலிக்கு அவர் மீது காதல் வந்துள்ளது. தனது வருங்கால கணவன் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என அவர் வைத்திருந்த பல எண்ணங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ஜேம்ஸை உருகி உருகிக் காதலிக்க ஆரம்பித்துள்ளார். இவர்களது காதல் ஷோலியின் குடும்பத்திற்குத் தெரிய வந்த நிலையில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

Couple Sets World Record For Biggest Height Difference

ஆனால் பல்வேறு சிரமங்களை இருவரும் எதிர்கொண்ட நிலையில், அவர்கள் அதிகாரப்பூர்வமாக 2013-ஆம் ஆண்டின் இறுதியில் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒலிவியா என்ற இரண்டு வயது மகள் உள்ளார். ஒருவர் மீது காதல் வந்துவிட்டால் அவரது கண்ணுக்கு வேறு எந்த விஷயமும் பெரிது அல்ல என்பதை நிரூபித்துள்ளது ஜேம்ஸ், ஷோலியின் காதல்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Couple Sets World Record For Biggest Height Difference | World News.