‘ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இருக்கு’!.. மகாராஷ்டிரா முதல்வர் தெரிவித்ததும் ‘அதிரடி’ அறிவிப்பை வெளியிட்ட ரிலையன்ஸ் நிறுவனம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 100 டன் ஆக்ஸிஜனை இலவசமாக வழங்குவதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிரித்து வண்ணம் உள்ளது. இதன்காரணமாக கொரோனா தடுப்பு மருந்தும், ஆக்சிஜன் சிலிண்டர்களும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்தது. இதனை அடுத்து தேவையான மருந்து மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அம்மாநில உத்தவ் தாக்கரே கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி எந்தவித கட்டணமின்றி 100 டன் ஆக்சிஜனை மகாராஷ்டிராவுக்கு இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதனை அங்குள்ள அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனை அம்மாநில அமைச்சர் ஏக்நாத் சிண்டே தற்போது உறுதி செய்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு, உலகிலேயே மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.