‘ஊழியர்கள் தான் எங்க சொத்து’!.. ரூ.700 கோடி மதிப்பில் ஸ்பெஷல் ‘போனஸ்’.. பிரபல ‘ஐடி’ நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > வணிகம்பிரபல ஐடி கம்பெனி தங்களது ஊழியர்களுக்கு 700 கோடி ரூபாய் மதிப்புள்ள போனஸ் வழங்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்.சி.எல் (HCL) தங்களது ஊழியர்களுக்கு சிறப்பு போனஸ் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. 2020ம் ஆண்டில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் இலக்கை எட்டியதை அடுத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான ஒன் டைம் சிறப்பு போனஸ் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 1 லட்சத்து 59 ஆயிரம் ஊழியர்கள் பயனடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்த ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி அப்பாராவ்.விவி, ‘எங்கள் ஊழியர்கள்தான் எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்க சொத்து. இடைவிடாத தொற்றுநோய் இருந்தபோதிலும், எங்கள் ஹெச்.சி.எல் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் மிகுந்த அர்ப்பணிப்பையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பங்களித்தது. அதனால் 10 பில்லியன் டாலர் வருவாய் இலக்கை எட்ட முடிந்தது’ என தெரிவித்துள்ளார்.
ஹெச்.சி.எல் நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட சேவையுடன் கூடிய அனைத்து ஊழியர்களுக்கும் 10 நாட்கள் சம்பளத்திற்கு சமமான போனஸ் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போனஸ் பிப்ரவரி மாதத்திற்குள் அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
