BREAKUP: காதல் தோல்வியால் பாதிக்கப்படும் ஆண்கள்..ஆராய்ச்சியாளர்கள் தந்த ஷாக் ரிப்போர்ட்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Pandidurai T | Feb 02, 2022 09:05 PM

சங்க காலம் முதல் இன்றைய ஆன்ட்ராய்டு காலம் வரை காதல் என்பது மனிதர்களிடம் இயல்பாய் தோன்றும் ஒரு உணர்வு. காதலுக்கு இருக்கும் ஆயுள், காதலர்களுக்கு இருப்பதில்லை. பார்த்ததும் காதலில் விழுந்து பேசி, நகைத்து  ஓருயிர் என வாழ்ந்தவர்கள் மீண்டும் ஈருடல் ஈருயிராக வாழநேரிடுகிறது. காதல் பிரிவுக்கு ப்ரேக் அப் என்று நாகரீகமாக சொல்லிவிட்டு செல்லலாம். காதல் எந்த அளவுக்கு சந்தோஷத்தை கொடுக்குமோ, அதே அளவு வலியையும் கொடுக்கும்.

Research report that love failure causes mental illness in men

"கொரோனாவை எதிர்கொள்ள ஆமை மாத்திரையா??".. இந்திய விஞ்ஞானியின் பரபரப்பு கண்டுபிடிப்பு!

ஏதோ ஒரு சில காரணங்களால் சிலர் தங்கள் காதலையோ அல்லது திருமணத்தையோ பிரேக் அப் செய்ய நினைப்பார்கள். அதேபோல், எல்லோருக்கும் பொதுவான காரணங்களால் கூட பிரேக் அப்புகள் நிகழும். இந்த காரணங்கள் அனைத்து இணைகளுக்குள்ளும் ஏதோ ஒரு சமயத்தில் ஏற்படும். இந்நிலையில்,  ஆண்கள் அதிகம்பேர் பிரேக் அப் எனப்படும் காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவதாக கொலம்பிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Research report that love failure causes mental illness in men

இதுகுறித்து ஆய்வின் முதன்மை ஆசிரியர், கனடா ஆராய்ச்சித் தலைவரும், UBC நர்சிங் பேராசிரியருமான டாக்டர் ஜான் ஆலிஃப் கூறுகையில்,

பிரேக் அப்பிற்குப் பிறகு, கவலை, மனச்சோர்வு மற்றும் தற்கொலை உள்ளிட்ட மனநோய்களினால் ஆண்களுக்கு அதிக ஆபத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. பிரேக் அப்பிலிருந்து இயல்பு வாழ்க்கைக்கு வரமுடியாமல் குற்றவுணர்ச்சிக்குள்ளாகி கவலையில் நிழல் போல் வாழ்கின்றனர் என தெரிவித்தார்.  காதலுக்கு பிறகான திருமணப் பிரிவு ஆண்களை தற்கொலை எண்ணங்களுக்கு தூண்டுகிறது.

UBCஆண்கள் சுகாதார ஆராய்ச்சி திட்டத்தில் டாக்டர் ஆலிஃப் மற்றும் மருத்துவ குழுவினர் 47 ஆண்களை நேர்காணல் செய்தனர். தங்கள் உறவுகளில் மோதலை எதிர்கொள்ளும்போது, ஆண்கள் பிரச்னைகளை குறைத்து மதிப்பிட முனைகிறார்கள். இதனால் இல்லற வாழ்வில் விரிசல் ஏற்பட்டு உறவு முறிகிறது. துணையை புரிந்துகொள்ள முயற்சிப்பதில் பிரச்னை ஏற்படுவுது தெரியவந்தது. மனைவியை விட்டு பிரிந்த பிறகு  துன்பத்தில் இருக்கும் ஆண்கள் கோபம், வருத்தம், சோகம், அவமானம் மற்றும் குற்ற உணர்வு போன்ற உணர்வுகளைச் சமாளிக்க மது உள்ளிட்ட பொருட்களை உட்கொள்ளுகின்றனர் என்றும் அந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

Research report that love failure causes mental illness in men

தன்னை வெறுத்து விட்டு மற்றவரை காதலிக்க முடியாது. அவ்வாறு ஒர் உறவு தொடர்ந்தாலும் அது சாத்தியமில்லை. நம்மை விரும்பாமல் மற்றவரை காதலிக்கவோ, சந்தோஷப்படுத்தவோ நம்மால் முடியாது. ஓர் உறவை தொடங்க வேண்டுமெனில் முதலில் தன்னை நேசிக்கத் தொடங்கவேண்டும். உறவுகளில் காதல் முதல் வெறுப்பு வரை எதுவுமே அளவோடு இருக்கவேண்டும். அதீத அன்பு, அதீத வெறுப்பு இரண்டுமே உறவுக்குப் பகைதான்.

SSC அறிவிப்பு: +2 படிச்சிருந்தா போதும் 80,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

Tags : #RESEARCH REPORT #LOVE FAILURE #MENTAL ILLNESS #MENTAL ILLNESS IN MEN #UNIVERSITY OF COLUMBIA #காதல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Research report that love failure causes mental illness in men | World News.