கூகுள் எடுத்த அதிரடி முடிவினால்.. ஏர்டெல்-க்கு அடித்த ஜாக்பாட்.. எதிர்காலத்தில் வரப்போகும் அசத்தல் தொழில்நுட்பங்கள்

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Jan 28, 2022 09:24 PM

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல்,  கூகுள் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, ஏர்டெல் நிறுவனத்தில் சுமார் 7,500 கோடி ரூபாய் அளவிற்கு கூகுள் கூகுள் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது.

Google decided to invest Rs 7,500 crore in bharti airtel

ரூ.7,500 கோடி முதலீடு:

கூகுள் நிறுவனம் சுந்தர் பிச்சை தலைமையில் பல மாற்றங்களையும், முதலீடுகளையும் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்திய நாட்டின் மிக அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள மிகப் பெரும் தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல்லில் அமெரிக்காவின் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் ரூ.7,500 கோடி முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

7.1 கோடி ஈக்விட்டி பங்குகளை வழங்க ஒப்புதல்:

கூகுள் ஃபார் இந்தியா டிஜிட்டைசேஷன் ஃபண்டின் ஒரு பகுதியாக இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7,500 கோடி முதலீடு செய்ய உத்தேசித்துள்ளது. இதற்கு பார்தி ஏர்டெல் நிறுவனம், கூகுளுக்கு முன்னுரிமை அடிப்படையில் 7.1 கோடி ஈக்விட்டி பங்குகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவித்துள்ளது.

Google decided to invest Rs 7,500 crore in bharti airtel

300 மில்லியன் டாலர் வரை முதலீடு:

மேலும், ஏர்டெல்லில் 1.28% உரிமையைப் பெற 700 மில்லியன் டாலர் முதலீடும், பல ஆண்டு வர்த்தக ஒப்பந்தங்களுக்கு 300 மில்லியன் டாலர் வரை முதலீடும் அடங்கும் என பாரதி ஏர்டெல் ஒழுங்குமுறைத் தாக்கல் ஒன்றில் தெரிவித்துள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூகுள் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு ஒவ்வொரு நிறுவனமும் ரூ.5 முகமதிப்பு கொண்ட 71,176,839 ஈக்விட்டி பங்குகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

கூகுள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. உங்க பார்ட்னரோட நேரம் செலவு பண்ணுங்க.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஊழியர்கள்

Google decided to invest Rs 7,500 crore in bharti airtel

புதுமையான தயாரிப்புகள்

மேலும் இதுகுறித்து கூறிய பார்தி ஏர்டெல்லின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் 'புதுமையான தயாரிப்புகள் மூலம் இந்தியாவின் டிஜிட்டல் டிவிடெண்டை வளர்ப்பதற்கான பார்வையை ஏர்டெல் மற்றும் கூகுள் பகிர்ந்துகொள்கின்றன. எதிர்காலத்தில் தயாராக இருக்கும் எங்களின் நெட்வொர்க், டிஜிட்டல் தளங்கள், கடைசி மைல் விநியோகம் மற்றும் கட்டணச் சூழல் அமைப்பு ஆகியவற்றுடன், இந்தியாவின் டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆழத்தையும் அகலத்தையும் அதிகரிக்க கூகுளுடன் நெருக்கமாகப் பணியாற்ற நாங்கள் ஆவலாக இருக்கிறோம்' என கூறியுள்ளார்.

மனசுக்குள்ள வருத்தப்பட்டுகிட்டு இருந்துருக்காரு.. சின்ன வயசுல இருந்தே நிறைவேறாத மகள்களின் ஆசை.. கல்யாணத்தில் அப்பா கொடுத்த சர்ப்ரைஸ்

Google decided to invest Rs 7,500 crore in bharti airtel

Tags : #GOOGLE #INVEST RS 7 #500 CRORE IN BHARTI AIRTEL #கூகுள் #ரூ.7 #500 கோடி முதலீடு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Google decided to invest Rs 7,500 crore in bharti airtel | World News.