''யார் என்று தெரிகிறதா ?'' - போட்டோ பகிர்ந்து க்ளூ கொடுத்த பிரபலம் - ரசிகர்கள் கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஷாலினி குழந்தை நட்சத்திரங்களாக எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக குழந்தைகளை மையப்படுத்தி உருவான ரஜினிகாந்த்தின் 'ராஜா சின்ன ரோஜா' படத்தில் சுட்டிப் பெண் வேடத்தில் அவர் நடித்திருந்ததை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்திருக்க முடியாது.

Writer Rajeshkumar shares Popular Heroines childhood Photo Viral Ft Shalini, Thala Ajith | எழுத்தாளர் ராஜேஷ்குமார் பகிர்ந்த பிரபல ஹீரோயினின் சின்ன வ

தமிழில் ஹீரோயினாக ஷாலினி நடித்த 'காதலுக்கு மரியாதை', 'அமர்களம்', 'அலைபாயுதே' போன்ற படங்கள் கிளாஸிக் ரகம். அமர்களம் படத்தில் நடிக்கும் போது அஜித்துக்கும் ஷாலினிக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர ஜோடிகளாக அறியப்படுகின்றனர்.

இந்நிலையில் பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷாலினியின் சிறுவயது ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் ராஜேஷ்குமார் எழுதிய கிரைம் நாவலை ஷாலினி படித்துக்கொண்டிருக்கிறார். அவரது பதிவில், ''யார் என்று தெரிகிறதா ? 1986ல் என்னுடைய க்ரைம் நாவலைப் படித்த இந்த சிறுமி இன்றைக்கு ஒரு பிரபலத்தின் மனைவி'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Writer Rajeshkumar shares Popular Heroines childhood Photo Viral Ft Shalini, Thala Ajith | எழுத்தாளர் ராஜேஷ்குமார் பகிர்ந்த பிரபல ஹீரோயினின் சின்ன வ

People looking for online information on Ajith Kumar, Shalini will find this news story useful.