'இந்த மறக்க முடியாத சீனுக்கு அஜித்தும் ஒரு காரணம்' - அலைபாயுதே பற்றி மாதவன் சொல்லும் சீக்ரட்.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் மாதவன் அலைபாயுதே படம் குறித்து ஒரு சீக்ரட் விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
![அலைபாயுதேவும் அஜித்தும் - மாதவன் | madhavan opens about ajith role in shalini starred alaipayuthe அலைபாயுதேவும் அஜித்தும் - மாதவன் | madhavan opens about ajith role in shalini starred alaipayuthe](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/madhavan-opens-about-ajith-role-in-shalini-starred-alaipayuthe-news-1.jpg)
2000-ஆம் வெளியான திரைப்படம் அலைபாயுதே. மாதவன், ஷாலினி உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படத்தை மணிரத்னம் இயக்கினார். காதல் படமாக உருவான இத்திரைப்படம், 20 வருடங்களை கடந்து, ட்ரென்ட் செட்டர் படமாக கொண்டாடப்படுகிறது. இதனிடையே நேற்று இத்திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைவதையடுத்து, #20YearsofAlaipayuthe என ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
இந்நிலையில் அலைபாயுதே படத்தை பற்றி நடிகர் மாதவன் ஒரு ருசிகர சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அலைபாயுதே படத்தில் மாதவன் ஷாலினியிடம் ரயில்வே ஸ்டேஷனில் பேசும் காட்சி மிகப்பிரபலம். ''நீ அழகா இருக்கன்னு நினைக்கல'' என மாதவன் பேசும் வசனம் காலத்தை கடந்த நிற்கிறது. அந்த காட்சியின் போது நடந்த விஷயத்தை தான் மாதவன் பகிர்ந்திருக்கிறார். அந்த காட்சியில் நடிக்கும் போது மாதவன் அவரது மனைவி சரிதாவை நினைத்து கொண்டு நடித்ததாக கூறியிருக்கிறார். மேலும் அதே போல, ஷாலினி அவரது காதலரான அஜித்தை மனதில் நினைத்து அந்த காட்சியை நடித்தாராம்.