பீட்டர் பாலின் முன்னாள் மனைவியின் வழக்கு குறித்து வனிதா அதிரடி - ''பணம் பறிப்பதற்காகவே...''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகையும், பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளருமான வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பால் என்பவருக்கும் நேற்று (27/06/2020) எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இருவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

Bigg Boss actress Vanitha speaks about Peter Paul's Divorce case | பீட்டர் பாலின் விவாகரத்து வழக்கு குறித்து பிக்பாஸ் வனிதா அதிரடி

இந்நிலையில் பீட்டர் பாலின் முன்னாள் மனைவி எலிசபெத் கடந்த ஜூன் 19 ஆம் தேதி வடபழனி காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரின் பேரில் பீட்டர் பால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த புகாரில் இருவரும் பிரிந்து 7 வருடங்கள் ஆன நிலையில் பீட்டர் பால் அவரை முறையாக விவகாரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து Behindwoods சார்பாக வனிதாவை தொடர்புகொண்ட போது, ''திரு பீட்டர் பால் மணம் முடிப்பது தொடர்பாக அனைத்து விஷயங்கள் தெரிந்தே இத்தகைய முடிவை நான் எடுத்திருக்கிறேன். நாங்கள் இருவரும் மனப்பூர்வமாக சம்மதித்ததால் இந்தத் திருமணம் நடைபெற்றது.

திரு பீட்டர் பால் முதலில் திருமணம் செய்துகொண்ட எலிசபெத் ஹெலன் என்பவர் 8 ஆண்டுக்கு முன்பே அவர்களது இல்லற வாழ்க்கையை முடித்துக் கொண்டனர். இப்போது வேண்டுமென்றே பணம் பறிப்பதற்காகவே இத்தகைய புகாரை வடபழனி காவல் நிலையத்தில் அளித்துள்ளார் மேலும் என்னிடம் ஒரு கோடி ரூபாய் வரை நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று மறைமுகமாக முயற்சி எடுத்து வருகிறார்...

இது தொடர்பாக எனது வழக்கறிஞர் சட்டபூர்வமாக அணுகி வருகிறார் விரைவில் நல்ல முடிவு ஏற்படும். நானும் பீட்டர் பால் இணைந்து எடுத்த முடிவு இது'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பீட்டர் பாலின் முன்னாள் மனைவியின் வழக்கு குறித்து வனிதா அதிரடி - ''பணம் பறிப்பதற்காகவே...'' வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss actress Vanitha speaks about Peter Paul's Divorce case | பீட்டர் பாலின் விவாகரத்து வழக்கு குறித்து பிக்பாஸ் வனிதா அதிரடி

People looking for online information on Bigg boss, Peter Paul, Vanitha will find this news story useful.