அஜித்தின் மங்காத்தா ஸ்டைல் என்ட்ரி - தல காரில் இருந்து இறங்கினாலே மாஸ்தான்.! Viral Video
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் அஜித் இன்று போனி கபூரை சந்தித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் அஜித். இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இத்திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் படத்தில் நடிப்பவர்கள் பற்றிய தகவலை படக்குழு ரகசியமாக வைத்திருக்கிறது. போனி கபூர் தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு யுவன் ஷங்கர் இசையமைக்கிறார். வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று அஜித் தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்துள்ளார். நடிகை ஶ்ரீதேவியின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலிக்காக அவர் இன்று அவர்களது வீட்டுக்கு வந்துள்ளார். காரில் இருந்து மாஸாக அஜித் இறங்கி வரும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் அஜித்தின் இந்த புதிய வீடியோ ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. வலிமை படத்தில் அஜித் போலீஸ் வேடத்தில் நடிப்பதாகவும், படம் தீபாவளிக்கு வருவதாகவும் தயாரிப்பாளர் போனி கபூர் கூறியது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் மங்காத்தா ஸ்டைல் என்ட்ரி - தல காரில் இருந்து இறங்கினாலே மாஸ்தான்.! VIRAL VIDEO வீடியோ