வனிதா விஜயகுமார் பீட்டர் பால் திருமண வீடியோ - ஒரு முன்னோட்டம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டில் எத்தனையோ காதல் திருமணங்கள் நடந்துள்ளன. ஆனால் இன்று (ஜூன் 27) அன்று நடந்த வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் திருமணம் வித்யாசமானது.

Vanitha Vijayakumar marries Peter Paul today viral video

வனிதா விஜயகுமார் இயக்குநர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக சில நாட்களுக்கு முன்னால் அறிவித்தார். தங்களின் ஆழமான காதலை வெளிப்படுத்தும் வண்ணம் சில தினங்களுக்கு முன்பு வனிதா மற்றும் பீட்டர் பால் இருவரும் தங்கள் கைகளில் ஒருவர் மற்றவர் பெயரை டாட்டூ குத்திக்கொண்டனர்.

அவரது திருமணத்துக்கு வனிதாவின் இரண்டு மகள்களும் ஏற்கனவே சம்மதம் தெரிவித்திருந்த நிலையில்,  இன்று (ஜூன் 27-ம் தேதி) சென்னையிலுள்ள வனிதாவின் வீட்டில் கிறிஸ்துவ முறைப்படி எளிமையான முறையில் திருமணம் நடந்தது. வெண்ணிற ஏஞ்சல் உடையில் வனிதா ஜொலிக்க, பீட்டர் கோட்சூட் அணிந்திருந்தார். இருவரும் மோதிரம் மாற்றியபின், முத்தமிட்டனர். தற்போது இத்தம்பதியரின் திருமணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சோஷியல் மீடியாவில் மின்னல் வேகத்தில் வைரலாகி வருகின்றது.

தற்போது Behindwoods Tv-யில் இத்தம்பதியரின் திருமண நிகழ்ச்சியின் காணொளி விரைவில் பதிவேற்றப்படும். அதற்கான சிறிய முன்னோட்டம் உங்கள் பார்வைக்கு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vanitha Vijayakumar marries Peter Paul today viral video

People looking for online information on Peter Paul, Vanitha, Vanitha wedding will find this news story useful.