தல அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ”Part 2?” - இயக்குனர் ராஜிவ் மேனன் பதிவு!
முகப்பு > சினிமா செய்திகள்மணிரத்னத்தின் பாம்பே படத்துக்கு ஒளிப்பதிவு செய்து புகழின் உச்சியை தொட்டவர் இயக்குநர் ராஜிவ் மேனன். தொடர்ந்து மின்சாரக்கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களை எடுத்த இவர் இயக்குனராகவும் புகழை அடைந்தார்.
இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என்று பல துறைகளில் ஆர்வம் கொண்டிருந்த இவருக்கு ரசிகர் தரப்பில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. மீண்டும் மணிரத்னதின் குரு, கடல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அவர், ஜி.வி.பிரகாஷ் நடித்த சர்வம் தாளமயம் படத்தையும் இயக்கினார்.
இன்றுடன் அவர் இயக்கிய ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதில் அஜித், மம்முட்டி, ஐஷ்வர்யா ராய், தபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்தனர். வழக்கமான ஹீரோ சப்ஜெக்டுகளில் இருந்து விலகி பெண்களை மையப்படுத்தி வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்துக்கு 2ம் பாகம் கேட்டு வெளியான ஒரு செய்தியை ஸ்க்ரீன் ஷாட் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்ட ராஜிவ் மேனன். இந்த வேண்டுகோளுக்காக பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து ரசிகர்கள் 2ம் பாகத்துக்கான வேண்டுகோளை கமெண்டில் முன்வைத்தபடியே இருக்கின்றனர்.

