பாடகி எஸ்.ஜானகி மரணம் என்று பரவிய தகவலுக்கு பிரபல இசையமைப்பாளர் விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனது இனிமையான குரலால் பல தலைமுறை ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் பாடகி எஸ்.ஜானகி. எந்த விதமான பாடலானாலும் மிக தத்ரூபமாக பாடி அதற்கு உயிர் கொடுப்பது அவரது ஸ்பெஷல். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் என பல தலைமுறை இசைக்கலைஞர்களுடன் பணிபுரிந்துள்ளார்.    

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.  எஸ்.ஜானகி பாடல்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. தற்போதைய இளம் பாடகர்களுக்கு அவர் முன்மாதிரியாக விளங்கி வருகிறார்.

இந்நிலையில் பாடகி எஸ்.ஜானகி மரணம் என்று தகவல் ஒன்று பரவியது. இதற்கு இசையமைப்பாளர் தீனா விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, ''எஸ்.ஜானகி அம்மையார் தவறிவிட்டதாக தவறான தகவல் பரவி வருகிறது.  நான் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அண்ணா கிட்ட பேசினேன்.

அவர் அம்மா நல்லா சிரிச்சு பேசிட்டு இருக்காங்கனு சொன்னார். மேலும் என்னை இதுவரை 6 முறை கொன்னுட்டாங்கனு காமெடியா சொன்னாங்களாம். யாரும் இந்த தகவலை பரப்ப வேணாம்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : S.Janaki, Dhina

Popular music director clarifies about Veteran Singer S.Janaki's health Condition ft Dhina | பாடகி எஸ்.ஜானகி மரணம் என்று வெளியான செய்திக்கு பிரபல இசைய

People looking for online information on Dhina, S.Janaki will find this news story useful.