'ஆடவும் முடியாது.. அசையவும் முடியாது' - வடிவேலு மாதிரி தவித்த மணிமேகலை.! செம ஜாலியான வீடியோ.
முகப்பு > சினிமா செய்திகள்ஆங்கர் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஜாலியான வீடியோவை பகிர்ந்துள்ளார்.

சன் மியூசிக் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலம் அடைந்தவர் வீஜே மணிமேகலை. இனிமையான பேச்சு மற்றும் காமெடி கலந்த கலாய் இவருக்கு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியது. தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர் ஹுசைன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சன் டிவி, சன் நியூஸ் என்று பல நிகழ்ச்சிகளில் முகம் காட்டிய அவர் விஜய் டிவியின் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.
இந்நிலையில் தற்போது கிராமத்தில் பொழுதை கழிக்கும் அவர் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சுந்தரா ட்ராவல்ஸ் வடிவேலு போல, அவர் ஆடாமல் அசையாமல் நின்று, விளையாடும் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். மேலும், ''எல்லா கேம்லயும் என்னை டார்கெட் பண்றதே இவங்களுக்கு வேலையா போச்சு'' என அவர் பதிவிட்டுள்ளார். தனது கணவருடன் செம காமெடியான வீடியோவை பகிர்ந்துள்ள அவருக்கு, ரசிகர்களின் லைக்ஸ் குவிந்து வருகிறது.