சிவகார்த்திகேயன், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியின்... - வைரலாகும் ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் 'ஹீரோ' படத்துக்கு பிறகு,  தற்போது 'டாக்டர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் திலீபன்குமார் இயக்க, சிவகார்த்திகேயன் புரொடக்ஷன் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

Sivakarthikeyan with Vijay TV Cook With Comali Anchor Manimegalai

இந்நிலையில் பிரபல டிவி தொகுப்பாளர் மணிமேகலை தனது ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன், தொகுப்பாளர் தர்ஷன் உள்ளிட்டோருடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ''குக் வித் கோமாளி படப்பிடிப்பின் போது பக்கத்து செட்ல சிவகார்த்திகேயனுடன் சர்ப்ரைஸ் மீட்டிங். உங்க பிஸியான டைம்ல எங்களுடைய எல்லா நிகழ்ச்சிகளையும் பேசியது  மகிழ்ச்சி. உங்கள் வாழ்த்துக்கு நன்றி புரோ'' என்று தெரிவித்துள்ளார்.

'இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கப்படுவதாக அதன் தயாரிப்பு நிறுவனமான 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor