பிரபல டிவி தொகுப்பாளர்களாகவும், ஆர்ஜேக்களாகவும் இருந்தவர்கள் நடிகர்களாக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் மகுந்த வரவேற்பை பெற்று வருகிறார்கள். அந்த வகையில் மிர்ச்சி செந்தில், மிர்ச்சி சிவா, ஆர்ஜே பாலாஜி, பிரியா பவானி ஷங்கர், சிவகார்த்திகேயன், ரியோ என அந்த பட்டியல் மிக நீளம்.

அந்த பட்டியலில் சமீபத்தில் இணைந்துள்ளார் விஜே மணிமேகலை. அவர் தற்போது 'பாரதி கண்ணம்மா' சீரியலில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ''எனக்கு வராத டிப்பார்ட்மென்ட் - ஆக்டிங்ல குட்டி என்ட்ரி, மிஸ்டர் கூல் டைரக்டர் சார் பிரவீன் பென்னட் சாருடன் பணிபுரிந்தது மிகுந்த மகிழ்ச்சி, திங்கள் - வெள்ளி வரை இரவு பாரதி கண்ணம்மா பாருங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags : Manimegalai, Bharathi Kannamma