'தாயம் முதல் பம்பரம் வரை'- மணிமேகலை செம ஆட்டம்.! இந்த ஊரடங்கை இவங்கதான் செமயா அனுபவிக்கிறாங்க.!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது.

இதையடுத்து இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இது வரும் மே மாதம் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருந்தபடியே பொழுதை கழிக்கின்றனர். பழைய சீரியல்களின் மறு ஒளிபரப்பு, டிவியில் திரைப்படங்கள், குடும்பத்தினருடன் விளையாடுவது என இந்த ஊரடங்கு அனைவரையும் பிசியாகதான் வைத்திருக்கிறது. இதனிடையே பிரபலங்கள் பலரும் தங்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் என்ன செய்கிறார்கள் என தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். உடற்பயிற்சி செய்வது, புதிய உணவுகளை சமைப்பது, படங்கள் பார்ப்பது என ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் இந்த ஊரடங்கு நேரத்தில் ஆங்கர் மணிமேகலை வேற லெவலில் டைம் பாஸ் செய்து கொண்டிருக்கிறார். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதுடன், தன் கணவருடன் கிராமத்து பக்கம் பறந்த அவர், அங்கு உள்ள மக்களுடன் சேர்ந்த செம ஜாலியாக பொழுது போக்கி கொண்டிருக்கிறார். தாயம், கிரிக்கெட், பம்பரம், பாண்டி என ஊர்மக்களுடம் விளையாடி செம ஜாலி செய்து கொண்டிருக்கிறார் மணிமேகலை. சிட்டியில் பிசியாக இருந்தவர், தற்போது கொரோனா வைரஸால் ஊர் பக்கம் ஒதுங்கி, நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.