ஆங்கர் மணிமேகலை வீட்டில் வெடித்து சிதறிய குக்கர்! - ஹஸ்பென்ட் எடுத்த பயங்கரமான வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நிகழ்ச்சி தொகுப்பாளர் மணிமேகலை வீட்டில் குக்கர் வெடித்து சிதற, அதுகுறித்த செம வீடியோவை பகிர்ந்துள்ளார்.

anchor manimegalai shares a video after cooker blast in her home

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வலம் வருபவர் மணிமேகலை. இவர் சன் மியூசிக்கில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஹிட் அடிக்க, தமிழகமெங்கும் பிரபலமானார். இதையடுத்து இவர் அண்மையில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று கலக்கியுள்ளார். கடந்த 2017-ஆம் வருடம் மணிமேகலை ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை அவரது கணவர் ஹுசைன் எடுத்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், 'எல்லாம் கரக்ட்டா பண்ணியும் இந்த குக்கர் எதுக்கு வெடிச்சதுன்னு எனக்கு இப்போ தெரிஞ்சாகனும், என்னை பார்த்தா இந்த குக்கருக்கு எப்படி தெரியுது,  நமக்கு வராத ஒரு விஷயத்தை இனி ட்ரையே பண்ணி பார்க்க கூடாது, கிட்ட நின்னிருந்தா என்ன ஆகியிருக்கும், அதுவும் இந்த மாதிரி நேரத்துல உதவி பண்ணாம வீடியோ எடுக்குற இந்த ஹுசைன் மாதிரி ஆள வைச்சுட்டு ஒன்னும் பண்ண முடியாது, அட்லீஸ்ட் ஒரு வருஷத்துக்கு குக்கிங் பக்கம் போகவே கூடாது, வீடு ஃபுல்லா க்ளீன் பண்ற கஷ்டம் கூட பரவாயில்ல, மேக்கம் இல்லாம இந்த ஹுசைன் பையன் வீடியோ ரெக்கார்ட் பண்ணது தான் மன வருத்தமா இருக்கு' என அவர் பதிவிட்டுள்ளார்.

Entertainment sub editor