தனது கணவரின் பிறந்தநாளை ஆங்கர் மணிமேகலை செம சூப்பராக கொண்டாடியுள்ளார்.

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஆங்கராக கலக்கி வருபவர் மணிமேகலை. சன் மியூசிக்கில் இவரின் கலகலப்பான பேச்சுக்கு தனி ரசிகர்கள் உண்டு. இவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஜாலியான பதிவுகளை இவர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருக்கு பிறந்தநாள் கொண்டாடிய போட்டோக்களை பகிர்ந்துள்ளார். கிராமத்தில் அழகாக பிறந்தநாள் செட்டப் செய்து செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். மேலும் ''எந்த இடத்தில் இருந்தாலும் உன் பிறந்தநாளை செம ஸ்பெஷலாக செய்துவிடுவேன்'' என அவர் பதிவிட்டுள்ளார். கணவரின் பிறந்தநாளை சூப்பராக கொண்டாடிய மணிமேகலையின் பதிவுக்கு ரசிகர்களின் லைக்ஸ் குவிந்து வருகிறது.