பேச தெரியலன்னா இப்படிதான் சமாளிக்கனும் போல.! மணிமேகலை சொல்லும் க்யூட் ஸ்டோரி.
முகப்பு > சினிமா செய்திகள்நிகழ்ச்சி தொகுப்பாளினி மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவுக்கு ரசிகர்களின் லைக்ஸ் குவிந்து வருகிறது.
![மணிமேகலையின் க்யூட் இன்ஸ்டாகிரம் பதிவு | Anchor manimegalai's instagram post goes viral மணிமேகலையின் க்யூட் இன்ஸ்டாகிரம் பதிவு | Anchor manimegalai's instagram post goes viral](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/anchor-manimegalais-instagram-post-goes-viral-news-1.jpg)
சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் மணிமேகலை. இவர் தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களிலும் கலக்கி வருகிறார். மேலும் அண்மையில் இவர் விஜய் டிவி நடத்திய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் இவரது காமெடியான பேச்சுக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதுமட்டுமின்றி, பல்வேறு கல்லூரி விழாக்களுக்கும் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், ' அடுத்து என்ன பேசுறதுன்னு தெரியலன்னா, உடனே சும்மா சிரிச்சு க்ரவுடை சமாளிச்சுற வேண்டியது.. மஞ்ச கலர் ஜிங்குச்சா ட்ரஸ்' என அவர் பதிவிட்டுள்ளார். மணிமேகலையின் இந்த நகைச்சுவையான பதிவிக்கு ரசிகர்களின் லைக்ஸ் குவிகிறது.