ஆத்தாடி... மொரட்டு கோபக்காரனா இருப்பானோ..!! ஆங்கர் மணிமேகலையிடம் கோபப்பட்ட சிறுவனின் வீடியோ.
முகப்பு > சினிமா செய்திகள்ஆங்கர் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் ஃபன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
![ஆங்கர் மணிமேகலை வெளியிட்ட ப்ளாக் காபி வீடியோ | small boy reaction after drinking black coffee prepared by anchor manimegalai ஆங்கர் மணிமேகலை வெளியிட்ட ப்ளாக் காபி வீடியோ | small boy reaction after drinking black coffee prepared by anchor manimegalai](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/small-boy-reaction-after-drinking-black-coffee-prepared-by-anchor-manimegalai-news-1.jpg)
சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக கலக்கியவர் மணிமேகலை. இவரின் துறுதுறு பேச்சுக்கென்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் இவர் அண்மையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது நகைச்சுவையான பேச்சால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இது மட்டுமின்றி, பட்டிமன்றங்கள் மற்றும் கல்லூரி விழாக்களிலும் மணிமேகலை கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் இவரது வீட்டில் குக்கர் வெடித்து சிதற, அதுகுறித்து இவரது கணவர் ஹுசைன் பதிவிட்டு வீடியோ வைரல் ஆனது.
இந்நிலையில் அவர் தற்போது ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். கிராமத்து பக்கம் விறகு அடுப்பில் அவர் ப்ளாக் காபி போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த காபியை குடிக்கும் சிறுவன் டக்கென கோபமாகி வேற லெவல் ரியாக்ஷன் கொடுப்பதையும் அவர் பதிவிட்டுள்ளார். மணிமேகலையின் இந்த வீடியோ நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.