'திமிறு' ஸ்ரியா தன் மகள் குறித்து பெருமிதம் - ''என் பொண்ணு ஈஸியா பண்ணிட்டா''
முகப்பு > சினிமா செய்திகள்விஷால் நடிப்பில் வெளியான 'திமிறு' படத்தில் மதுரையின் லேடி டானாக ஈஸ்வரி என்ற வேடத்தில் நடித்திருந்த ஸ்ரியா ரெட்டியை நம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அதனைத் தொடர்ந்து 'வெயில்', 'பள்ளிக்கூடம்' என தொடர்ந்து இயல்பான நடிப்பை வழங்கை ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் நடிகர் விஷாலின் சகோதரரும், நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவருக்கு அமலியா பெண் குழந்தையுள்ளது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் தனது மகளுடன் பனிமலையில் நடந்து சென்ற அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், ''நான் உடற்பயிற்சிலாம் செய்வதால் Ski மிகவும் ஈஸியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் மிகவும் கடினமாக இருந்தது. ஆனா என்னுடை பொண்ணு சில நொடிகளிலேயே பண்ணிட்டா'' என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஹன்சிகா, ''உண்மையான ஸ்டார் அமலியா'' என்று பதிவிட்டிருந்தார்.