பிரபல நடிகை Reaction - ''நம்ம Boy Friend விட இவர் நல்லாருக்கும் போது... ''
முகப்பு > சினிமா செய்திகள்சிம்பு நடித்த 'சிலம்பாட்டம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சனா கான். அதனைத் தொடர்ந்து 'தம்பிக்கு இந்த ஊரு', 'பயணம்' உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சையமாகியுள்ளார்.
இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான விஷாலின் 'அயோக்யா' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் தன் நண்பர் தன்னை ஏமாற்றிவிட்டாதாகவும், பல பெண்களுடன் அவர் நெருக்கமாக இருந்ததாகவும் சமீபத்தில் குற்றம்சாட்டினார். இந்த பதிவு சமீபத்தில் வைரலானது. இந்நிலையில் அவரது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், வெய்ட்டர் நம்ம பாய் ஃபிரண்ட் விட பெட்டரா இருக்கும் போது. என்று தனது ரியாக்ஷனை அதில் குறிப்பிட்டுள்ளார்.