Boy Friend-ன் குழந்தைக்கு தாயான பிரபல நடிகை – புகைப்படத்துடன் வெளியிட்ட உருக்கமான நோட்!!
முகப்பு > சினிமா செய்திகள்ஹிந்தி சினிமாவின் முன்னணி நடிகை கல்கி கேக்லா (Kalki Koechlin). பிறந்தது நம்ம பாண்டிச்சேரி என்றாலும் நடித்ததென்னவோ பெரும்பாலும் பாலிவுட்டில் தான். டேவ்.டி, ஏ ஜவானி ஹே திவானி, ட்ரிஷ்னா, கல்லி பாய் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

அஜித்தின் ’நேர்கொண்ட பார்வை’ படத்தில் இவர் ஒரு பாடலில் தோன்றி இருப்பார். கய் ஹெர்ஸ்பெர்க் (Guy Hershberg) என்ற இஸ்ரேலிய இசையமைப்பாளரோடு காதலில் இருந்த இவருக்கு கடந்த 7ம் தேதி குழந்தை பிறந்துள்ளது. ஒரு சலவைக்கல்லில் தன் குழந்தையின் கால் தடத்தை பதியவைத்து புகைப்படமாக வெளியிட்ட அவர், அக்குழந்தைக்கு சாஃபோ என்ற புராணிக கிரேக்க கவிஞரின் பெயரை சூட்டியுள்ளார்.
9 மாதங்கள் தன் வயிற்றுக்குள் ஒரு மோமோ பண்டம் (Momo) போல இருந்த என் குழந்தைக்கு பூமியில் சிறிது இடம் கொடுப்போம். குழந்தை பெற்றுக்கொள்ள உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெரும் உறுதி தேவைப்படுகிறது. பிரசவத்தை எதிர்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணுக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன் என கல்கி கேக்லா குறிப்பிட்டுள்ளார்.