ரஜினியின் Man vs Wild மோஷன் போஸ்டர்...தலைவர் வேற ரகம்! மொரட்டு சம்பவம் இருக்கு - பியர் க்ரில்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரஜினி, Man vs Wild பியர் க்ரில்ஸுடன் பங்கேற்ற நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டர் தற்போது ஆன்லனை கலக்கி வருகிறது.

rajini bear grylls man vs wild into the wild motion poster

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் தர்பார் படம் வெளியானது. இதையடுத்து தலைவர் 168 எனும் தனது அடுத்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா ஆகியோருடன் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க, இமான் இசையமைக்கிறார். இதனிடையே டிஸ்கவர் சேனலில் ஒளிபரப்பாகும் மேன் விசஸ் வைல்ட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பியர் க்ரில்ஸின் நிகழ்ச்சியில் ரஜினி பங்கேற்றார்.

இந்த நிலையில் தற்போது அந்த நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஸ்டைலிஷாக நிற்கும் ரஜினியை பார்த்து ரசிகர்கள் மோஷன் போஸ்டரை ட்ரென்ட் அடித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவை பதிவிட்ட பியர் க்ரில்ஸ், 'மிகப்பெரிய லெஜன்ட்டுடன் சேர்ந்து பயணித்தது மகிழ்ச்சியாக உள்ளது. முற்றிலும் புதுமையான ரஜினியை இதில் பார்க்கலாம்' என அவர் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியின் முதல் ஒளிபரப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

Entertainment sub editor