டிடி வீடியோ வெளியிட்டு உருக்கமான பதிவு - '' அவன் என் ஃபோட்டோவ வால்பேப்பரா வச்சுருந்தான்..
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல தொகுப்பாளினி டிடி, அதற்கு முன் சீரியல்கள், ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களிடையே பரீட்சையமாகியிருந்தாலும் 'காஃபி வித் டிடி' நிகழ்ச்சி அவரது டிரேட் மார்க்காக அமைந்தது.

அந்த நிகழ்ச்சியில் பிரபலங்களுடன் ஜாலியாக அவர் உரையாடும் விதம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. டிவி மட்டுமல்லாமல் 'நள தமயந்தி', 'பவர் பாண்டி', 'சர்வம் தாளமயம்' படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார்.' Speed, Get Set Go' நிகழ்ச்சியை தற்போது விஜய் டிவியில் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் டிடி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''10 வயது மதிக்கத்தக்க சிறுவன் அவனது பெற்றோருடன் வந்து என்னுடன் புகைப்படம் எடுக்க விரும்புவதாக தெரிவித்தான். புகைப்படம் எடுத்தோம். பின்பு மீண்டும் என்னிடம் வந்த அவன் என்னை மிகவும் பிடிக்கும் என்றும் அதனை சொல்வதற்கு பயமாக இருந்ததாகவும் தெரிவித்தான். எவ்வளவு இனிமையானவனாகவும் மரியாதை மிக்கவனாகவும் அவன் இருந்தான். இந்த அன்பு விலை மதிக்கமுடியாதது.
பின்னர் நான் காரில் ஏறிய போது நான் அவனை பார்த்து கையசைத்தேன். அப்போது அவன் ஃபோனில் என்னுடன் எடுத்த ஃபோட்டோவை வால் பேப்பராக வைத்திருந்தான். நீ எங்க இருந்தாலும் சிறப்பானவனாகவும் ஜென்டில்மேனாகவும் வளர்வாய் உன் Girl Friend மிகவும் அதிர்ஷ்டசாலி உன் பெற்றோரும் என்று குறிப்பிட்டுள்ளார்.